பக்கம்:வீரபாண்டியம்.pdf/827

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திர நிகழ்ச்சிகளின் காலக் குறிப்புகள். செகவீராாமக் கட்டபொம்மு என்பவர் பாஞ்சாலங் குறிச்சி ஆட்சியில் மிக்க மாட்சியுடையவர். அரிய வீரத் திறல்கள் பல ஆற்றியுள்ளமையால் திக்குவிசயத்துரை என்று வெற்றிப் பெயருடன் இவர் விளங்கி வந்தார். சிறந்த வீரத்துடன் தெய்வ பத்தியும் இவரிடம் கிறைத் திருக்தது. திருச்செக்துர் முருகப்பெருமான் பால் இ வ ர் பேரன்புடையவர். உச்சிப் போதில் அங்கே ஆண்டவ னுக்குப் பூசை முடிந்ததை அறிந்த பின்பே இவர், உணவு கொள்வது வழக்கம். அந்த அறிவிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளே நன்கு செய்து வைத்திருங் தார். இவர் நாளும் நியமமாய்ப் பூசித்து வந்த அழகிய முருகனது திரு உருவம் திருச்செந்துார் ஆலயத்தில் இன்றும் அலங்காாமா முன் மண்டபத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். சிறந்த பொன் ல்ை அமைந்த அங்த விக்கிரகத்தை வைத்துள்ள பேழைமேல் பாஞ்சாலங் குறிச்சி ராஜா பூசித்து வந்த திரு உருவம் என முகப்பில் எழுதப்பட்டுள்ளது. இவருக்குப் புதல்வர் மூவர். வீரபாண்டியன் t தளவாய்க் குமாரசாமி 2 துரைச்சிங்கம் 3. திக்குவிசயத்துரைக்குப் பின்பு தலைமைப் புதல்வ னை வீரபாண்டியன் பட்டத்துக்கு வந்தார். தளவாய்க் குமாரசாமியை ஊமைத்துரை என்றே யாவரும் அழைத்து வந்தனர். வீரபாண்டியன் பிறந்தது 3–1–1760 பட்டத்துக்கு வந்தது 2—2–1790

  • பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் முதல் பாகம் பக்கம் 39 முதல் இந்த விவரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/827&oldid=913637" இலிருந்து மீள்விக்கப்பட்டது