பக்கம்:வீரர் உலகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எல்லேயில் போர் 3

காகவே இந்த எச்சரிக்கை. கொடியவர்களே எதிர்த்துப் போர் செய்து வெற்றி கொள்ளத் துணிந்துவிட்டோம். அவர்களிடையே இருக்கும் நல்லவர்களும் பலம் இல்லா தவர்களும் இப்போதே புறப்பட்டு எங்காவது போய் விடுங்கள்!'

இப்படி அறத்தை அறைந்து முரசு கொட்டுகிரு.ர்கள். இது அறப் போர்.

4. r

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யிரும், பேணித் தென்புல வாழ்தர்க்கு அருங்கடன் இறுக்கும் பெrள் போற் புதல்வற் பெருஅ திரும் எம்.அம்பு கடிவிடுதும்; தும்அரண் சேர்மின்னன அறத்தாறு துவலும் பூட்கை மறம்' என்று இந்தத் தர்ம யுத்தத்தைப் பழங்காலப் புலவர் சொல்கிரு.ர். பகைவரின் காட்டில் வாழ்ந்தாலும் இவர்களேப் பாதுகாப்பது யாவருக்கும் கடமை. பசுக்களும் பசுவின் தன்மையையுடைய அந்தணர்களும் பெண்டிரும் பகைக்கனலுக்கு இரையாகத் தகாதவர்கள். நோயுடைய வர்களும், பிள்ளே பெருதவர்களும் இரக்கத்துக்குப் பாத்திரமானவர்கள். 'எம்முடைய அம்பை இனித் தாமதம் செய்யாமல் வேகமாக விடப் போகிருேம்; நீங்கள் உங்களுக்கு அரணமான இடங்களே அடைந்து விடுங்கள்' என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையை உடையது இந்த வீரம்.

அந்தணரும் மகளிரும் நோயாளிகளும் புதல்வர்களைப் பெருதவர்களும் இந்த எச்சரிக்கையைக் கேட்டுப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முயல்வார்கள். ஆளுல் பசுமாடுகளுக்கு அது தெரியுமா? அவற்றை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/10&oldid=647979" இலிருந்து மீள்விக்கப்பட்டது