பக்கம்:வீரர் உலகம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வீரர் உலகம்

பகை வேந்தன் அடுசமரிற் படுகிறன். அவன் இறக் தான் என்று அவனுடைய படைவீரன் தன் உயிரைத் தானே போக்கிக் கொள்கிருன். அப்படியே போரில் இறந்துபட்ட கணவனே மறுமையுலகத்திற் காணலாம் என்று அவனுடைய மனேவி உயிர் நீக்கிருள்.

சில சமயங்களில் போரில் புக்க இரண்டு கட்சி யினரும் ஒருவரை ஒருவர் மடித்துக்கொண்டு மாய்வ துண்டு. போர்க்களத்தில் யாவரும் மடிய அவர்களுடைய புகழ் மட்டும் எஞ்சி நிற்கும். இவ்வாறு அமைவதைச் சொல்வது தொகைநிலை என்னும் துறை. எல்லாரும் ஒரே தொகுதியாகப் புகழுடம்பை கட்டுப் பூதவுடம்பை விட்டுச் செல்வதை அது சொல்கிறது. e

இவ்வாறு தும்பைத் தினேயோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/101&oldid=648069" இலிருந்து மீள்விக்கப்பட்டது