பக்கம்:வீரர் உலகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வெற்றி மால்

மற்ற எந்தத் திணைக்குரிய பூவைப்பற்றித் தெரிந் தாலும் தெரியாவிட்டாலும், வாகைத் தினேக்குரிய பூவாகிய வாகையைப் பற்றித் தமிழ் இலக்கியம் பயில்கிற வர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். வாகை மாலே வெற் றிக்கு அறிகுறி என்பதை அறியாதவர்கள் மிகக் குறைவு. 'வாகை குடி வருகிருர்’ என்று வெற்றியடைந்து வருபவ ரைக் கட்டுரைகளிலும் கதைகளிலும் இன்றை எழுத்தாளர் களும் குறிப்பதைக் காண்கிருேம், இலக்கியங்களிலும் மற்றப் பூக்களேப்பற்றிய செய்திகள் வருவதைவிட வாகை சூடுவதைப் பற்றிய செய்திகளே மிகுதியாக வரும்.

கம்பராமாயணத்துக்குரிய பயனைச் சொல்ல வரும்,

'நாடிய பொருள்கை கூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;

விடியல் வழிய தாக்கும்; வேரியங் கமலை நோக்கும்; நீடிய அரக்கர் சேகன நீறுபட் டழிய வாகை சூடிய சிகஇை ராமன் தோள்வலி கூறு வோர்க்கே'

என்னும் பாடல் இராமன் அரக்கரை அழித்து வெற்றி கொண்டான் என்பதை, வாகை சூடிய என்ற தொடரால் குறிக்கிறது. பழைய செய்யுள் ஒன்று, வீரச் செயல்களைப் புலப்படுத்தும் வெட்சி முதலிய திணைகளின் இலக்கணத் தைச் சுருக்கமாகச் சொல்கிறது.

"வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;

வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்;-உட்காது எதிரூன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி; அதுவகாத்தில் ஆகும் உழிஞை;-அதிரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/102&oldid=648070" இலிருந்து மீள்விக்கப்பட்டது