பக்கம்:வீரர் உலகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வெற்றி மாலே 97

துக்கு அறிகுறியாக விளங்குகின்றன. இனிமேல் பகைவ ரால் உண்டாகும் துன்பத் துக்கே இடம் இல்லே.

அரசன் இனிப் பகைவரைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் முறைப்படி ஆட்சிசெய்யப் புகுகிருன் ஒதுதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஒம்புதல் ஆகிய ஐந்து தொழிலேயும் அவன் வழுவாமற் செய்கிருன். நான்மறைகளையும் ஒம்புகிருன். முத்தி வளர்க்கிருன். அவனும் மார்பில் முந்நூல் அணிபவளுதலின் இருபிறப் பாளனாக இலங்குகிறன். அவனுடைய சிறப்பைப் பாடும் துறைக்கு அரச வாகை என்று பெயர். -

அரசனுடைய முரசைப் புலவர்கள் பாராட்டுகிறர்கள். முன்பு போரின்போது மக்களே ஒன்று திரட்ட முழங்கிய முரசு இப்போது வெற்றியினே முழக்குகிறது. அரசனே உழவனுக வைத்துப் புகழுகிருர்கள் புலவர்கள். வயலில் உழும் உழவனுக அன்று; போர்க்களத்தில் அவன் உழுதானும். சேனேகளாகிய வரம்பையுடைய போர்க்கள மாகிய பெரிய வயலில், மிக்க கோபம் என்னும் விதையை விதைத்து, வெற்றி பெற்று அதல்ை வந்த புகழ் என்னும் பயிரை விளைவிக்கிருளும். அவன் கையில் வேலாகிய கோல் இருக்கிறது; யானேயே அவனுக்குப் பகடாக இருக் கிறது. இத்தகைய அரசன் எங்களைப் பாதுகாப்பதால் எங்களுக்கு வறுமை முதலிய துன்பங்களே இல்லை' என்று குடிக்மகள் மகிழ்ச்சி பெறுகிறர்கள். -

வெற்றி பெற்ற அரசன் களவேள்வி செய்வதாகச் சொல்வது இலக்கிய மரபு. பேய்கள் பசியினுல் மிகவும் துன்புற்று வருந்துமாம். போர்க்களத்தில் இறந்த பிணங் களே உண்ண வேண்டும் என்பது அவை பெற்ற சாபம். ஆகவே எங்கேனும் போர் கிகழ்ந்தால் தமக்கு விருந்து கிடைக்கப்போகிறது என்று அவை மிகவும் ஊக்கம் பெற்று அவ்விடத்துக்குச் செல்லுமாம். வீரத் தெய்வமாகிய கொற்

உல-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/104&oldid=648072" இலிருந்து மீள்விக்கப்பட்டது