பக்கம்:வீரர் உலகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வெற்றி மாலே 99

பேய்களுக்குப் பெருவிருந்து இடுவதையே கள வேள்வியாகக் கூறுவர்.

"அடுகிறல் அணங்குஆர

விடுதிறலான் களம்வேட்டன்று' என்பது அதன் இலக்கணம். 'கொல்லும் வலியினையுடைய பேய் வயிருர உண்ணப் பரந்த வலியினேயுடையான் கள வேள்வி வேட்டது என்பது இதன் பொருள்.

கலிங்கத்துப் பரணியில் விரிவாக இந்தக் காட்சியைச் சயங்கொண்டார் வருணிக்கிருர்,

பேய்கள் யானே மத்தகங்களையே அடுப்பாக வைக் கின்றன. தலையும் காலும் அற்ற ஆனேயையே பானையாக ஏற்றி, குதிரையின் இரத்தத்தை உலைநீராகப் பெய்து, குதிரைப் பல்லேயே உள்ளிப் பூண்டாகவும் நீகத்தையே உப்பாகவும் இட்டு, வாளேயும் அம்பையும் வேலையும் விறகாக இட்டு, சினத் ைேய எரியாக மூட்டுகின்றன. கலிங்க வீரர்களின் பல்லேத் தகர்த்துப் பழ அரிசியாக வைத்துக் கிழிந்த முரசையே உரலாகவும் யானைத் தந்தத்தையே உலக்கையாகவும் கொண்டு சலுக்கு மொலுக்கென்று பாட்டுப் பாடித் தீட்டுகின்றன.

'இந்த உரற்கண் இவ்வரிசி

எல்லாம் பெய்து கொல்யானைத் தந்த உலக்கை தனஓச்சிச்

சலுக்கு மொலுக்கெனக் குத்திரே...'

திட்டிய அரிசியை உலேயில் இட்டு அந்தக் கூழ் பொங்கி வழியாமல் வீரர்களின் கைகளே துடுப்பாகவும் குதிரையின் குளம்புக் கால்களே அகப்பைகளாகவும்

1. புறப்பொருள் வெண்பா மால், 160,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/106&oldid=648074" இலிருந்து மீள்விக்கப்பட்டது