பக்கம்:வீரர் உலகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வெற்றி மாலை 101

கினியர் விளக்குகிருர், பிறரோடு ஒப்பு நோக்கும் போதோ, போட்டியிடும்போதோ பெற்ற சிறப்பைச் சொல்வது வாகை; இயல்பான நிலையைச் சொல்வது முல்லே.

அரசர் சிறப்:ையும் பார்ப்பனர், வணிகர், வேளாளர் ஆகியவர்கள் சிறப்பையும் இவ்வாறு பாராட்டுவார்கள். வாழ்க்கையே ஒருவகைப் போராட்டந்தானே? ஆதலின் நல்ல முறையில் தம் இயல்பிலே பிறழாமல் கடமைகளை ஆற்றி வருவதே வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக அமையும். அதனுல்தான் இவற்றை வெற்றியைப்பற்றிச் சொல்லும் வாகைத் திணையில் சேர்த்துப் பாடினர்கள் என்று தோன்றுகிறது. - -

அந்தணர்கள் தாம் செய்யும் கடமைகளிலே சிறந்து கின்று வாழ்வதைச் சிறப்பிப்பது பார்ப்பன வாகை. அவர் களே அறுதொழிலோர் என்று தமிழிலும், ஷட்கர்ம நிரதர் கள் என்று வடமொழியிலும் கூறுவர்.

'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்'

என்று தொல்காப்பியம் கூறும். அதன் உரையில் நச்சினர்க்கினியர் மிக விரிவாக அத்தொழில்களை விளக்கு கிருர், ஓதல், ஒதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அவர்களுக்குரிய ஆறு தொழில்கள்.

வேதம், அங்கம், தர்மசாஸ்திரம், இராமாயணம், பாரதம், புராணம், அகத்தியம் முதலிய இலக்கணங்கள், இறையனர், அகத்தியனர் ஆகிய பெருமக்கள் பாடிய நூல் கள் ஆகியவற்றை ஓத வேண்டும் என்று அவ்வுரை யாசிரியர் கூறுகிரு.ர்.

அரசனுக்குரிய தொழில்கள் ஐந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/108&oldid=648076" இலிருந்து மீள்விக்கப்பட்டது