பக்கம்:வீரர் உலகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வீரர் உலகம்

- 'ஐவகை மரபின் அரசர் பக்கம்'

என்பது தொல்காப்பியம். ஒதுதல், வேள்வி செய்தல்,

ஈதல், காத்தல், தண்டம் செய்தல் என்பன அவன் தொழில்கள்.

வாணிகருக்கு ஒதுதல், வேள்வி செய்தல், ஈதல், உழவு, பசுவைப் பாதுகாத்தல், வாணிகம் என்னும் ஆறும் உரியவை. வாணிகம் செய்யும்போது விலையை மிகுதிப் படுத்தாமலும், பண்டத்தைக் குறைக்காமலும், லாபத்தை வெளிப்படையாகச் சொல்லியும் கடமையாற்றுவார்களாம்.

'நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சிஞேர் வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வது உம் மிகைகொளாது கொடுப்பது உம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும்’

என்று பட்டினப்பாலை என்னும் சங்கநூல் வணிகர்களின் இயல்பைக் கூறுகிறது. நுகத்தின் நடு எப்படி நடுநிலை பிறழாமல் இருக்கிறதோ அப்படி, பழிக்கு அஞ்சி உண்மையையே பேசுவார்கள்; தம் பொருளையும் பிறர் பொருளையும் ஒரு மாதிரியே பார்ப்பார்கள்; பண்டங்களுக் குரிய விலையாகத் தாம் பெறுவதை அதிகமாகப் பெற மாட்டார்கள்; பண்டத்தையும் குறைவாகக் கொடுக்க மாட் டார்கள்; பல வகையான பண்டங்களையும் கொள்முதல் இவ்வளவு, லாபம் இவ்வளவு என்று வெளிப்படையாகச் சொல்லி விற்ப்ார்கள் என்று இவ்வடிகள் சொல்கின்றன. கரிகாலன் அரசு செய்திருந்த காலத்தில் சோழ நாட்டில் வணிக்ர்கள் இந்த முறையில் வியாபாரம் செய்து வந்தார் களாம். பிற நாட்டு மக்கள் எல்லாம் காவிரிப்பூம்பட்டினத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/109&oldid=648077" இலிருந்து மீள்விக்கப்பட்டது