பக்கம்:வீரர் உலகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வீரர் உலகம்

உடையவர்கள் போகலாம். போருக்கு அஞ்சி ஒடும்போது பகமாடு எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா? ஆகவே பல மாடுகளே அப்படி அப்படியே 'விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவற்றைக் காக்க வேண்டும். இதற்காகத்தான் இப்போது முதலில் நாட்டின் எல்லேயில் இந்த காட்டு வீரர்கள் மாடுகளைப் பிடித்து வருவதற்காகப் புறப்படுகிறர்கள். அந்த மாடுகளே எளிதில் கைப்பற்றிக் கொண்டுவர முடியுமா? அவற்றைக் காக்கும் வீரர்களோடு பொருதே பிடித்துவர வேண்டும். ஆதலின் வீரக்கோலம் பூண்டு புறப்படு கிருர்கள். சண்டைக்கு எடுபிடி மாடுபிடி' என்று பழமொழிகூட உண்டாகியிருக்கிறது.

இவ்வாறு பகைவர் நாட்டுப் பசுக்களே அடித்துக் கொண்டு வருவது அறத்தின்பாற்பட்ட செயலென்று கூறுவர் புலவர்.

களவு நிகழ்கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கந்தருவ மணம் வேதவிதியானே இல்லறம் ஆயினுற்போல, இரு பெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன திங்கு செய்யத் தகாத சாதிகளே ஆண்டு கின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினேக் களவினல் தர்மே கொண்டு வந்து பாதுகாத்தலும் ெேதனப் படாது, அறமேயாம்' என்பது நச்சினுக்கினியர் உரை.

அரசன் ஏவலின்மேல் மாடுகளைக் கைப்பற்றிக் கொண்டுவரப் புறப்படுகிருர்கள் வீரர்கள். அந்தச் சமயத்

e*****-l.--്. ു.--ബ

தொல்காப்பியம், புறத்தின் இயல், , உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/11&oldid=647980" இலிருந்து மீள்விக்கப்பட்டது