பக்கம்:வீரர் உலகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வீரர் உலகம்

லுள்ள களைகளேப் பறித்துப் பூண்டுகளே அழித்து உழுத பிறகு, பயிர் செய்ய வேண்டும். நாடு முழுவதும் கல்வளம் கிரம்பப் பாடுபடவேண்டும். அப்போது அவன் பெற்ற வெற்றிக்கு உண்மையான பயன் உண்டு. அரசன் தான் பெற்ற வெற்றியினால் ஊக்கம் பெற்று, குடிமக்கள் தம் தம் துறையில் இன்னலும் , இடையூறும் இல்லாமல் அவற்றைப் போக்கி வென்று இன்ப வாழ்வு வாழ்வதற்கு ஏற்பன செய்யவேண்டும். நாடு ஒருமிக்க கின்று வெற்றிபெறுவது முதல் படி. அதன்பின் ஒவ்வொரு விடும் வறுமைப் பகையைப் போக்கி வெற்றிபெற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அறியாமைப் பகையைப் போக்கி அறிவொளி படைக்க வேண்டும்.

அவ்வாறு புதிய ஒளி படைக்கும் நாட்டிலே மேதாவி கள் தோன்றுவார்கள்; மகாத்மாக்கள் அவதாரம் செய் வார்கள்; மூன்று காலமும் அறிந்துணரும் பேரறிஞர்கள் உதிப்பார்கள். அந்தப் பெரியோர்களின் வாய்ச்சொல் என்றும் பிறழாது. யாவரும் போற்றும்படியாக முக்காலத் தின் நிகழ்ச்சிகளையும் அறியும் பெரியோரை அறிவர் என்று சொல்வது வழக்கம். இந்த மூன்று உலகத்திலும் இருத்ளப் போக்கும் கதிரவனேப் போன்றவர்கள் அவர்கள். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று கால நிகழ்ச்சியை ஆம் நன்கு அறிவார்கள். பால் புளித்தாலும், பகல் இருண்டு மாறிலுைம், கதிரவன் வடக்கே தோன்றிலுைம் அவர்கள் வாய்மொழி மாறவே மாருது என்று அந்த அறிவரின் இறப்பை நூல் கூறுகிறது. .

தொல்காப்பியனுர், "மறுவில் செய்தி முவகைக் துலமும், நெறியின் ஆற்றிய அறிவன்' என்று அறிவன் இயல்பைக் கூறுவர். காமம் வெகுளி மயக்கம் இல்லாத இழுகலாற்றின_இறப்ப்ம்-நிகழ்வும் எதிர்வும் என்னும் కా ! " புறப்பொருள் வெண்பா மால, 167.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/113&oldid=648081" இலிருந்து மீள்விக்கப்பட்டது