பக்கம்:வீரர் உலகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வீரர் உலகம்

கெஞ்சம் இல்லை. வீரரின் வாள் செய்யாத காரியத்தை அந்தக் கண் செய்துவிடும். பார்ப்பதற்குக் குளிர்ச்சியாக நீண்டு நெடுமா மழைக் கண்ணுகத்தான் தோன்றும். ஆளுல் அதைச் சுழற்றி எதிரியை வெல்லப் புறப்பட்டு விட்டார்களானல் அந்த மழைக்கண் வாட்கண் ஆகிவிடும். வாளேக் குறுக்கும் நெடுக்கும் சுற்றிலும் சுழற்துவதுபோல அந்த மோகினிகள் தம் கண்களேச் சுழற்றினர். அக் கண்கள் குறுக்கே பாய்ந்து விலங்கின. புத்தருடைய தோளேயும் மார்பையும் அளவெடுத்தன. தலைமுதல் அடி வரையில் பாய்ந்து வெட்டின. எங்களே எதிர்ப்பார் யார் என்று கிமிர்ந்து நின்றன. என்ன செய்தும் அந்தக் கூரிய வாள்கள் புத்த பகவானுடைய நெஞ்சைப் பிளக்க முடிய வில்லை. அவற்றின் முனைகள் சிறிதும் அதைத் தொட முடியாமல் மழுங்கின.

அந்த கெஞ்சத்தைத்தான் மெல்லிய 06ುಗೆ என்கிருர் கள். அது மெல்லியது எப்படி ஆகும்?

இவ்வாறு அந்த அழகிய பாடல் கேட்கிறது. -

"வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழல் அமர்ந்தோன் நெஞ்சம், யார்க்கும் அருள் இன் ந்ேதேன் உறைத்துதணி ஞெகிழ்த்து மலரினும் மெல்லிது என்ப; அதனைக் காமர் செவ்வி மாரன் மகளிர் - நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்த் தெடுத்த வாளும் போழ்ந்தில ஆயின் - யாதோ மற்றது. மெல்லிய வாறே:

- - - (போதி-அரசமரம்.பாசடை-பச்சை இல. உறைத்து. துளித்து. என்ப-என்று சொல்வார்கள். காமர்-அழகு. செவ்வி-பருவம். விலங்கி-குறுக்கே பாய்ந்து. மழைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/115&oldid=648083" இலிருந்து மீள்விக்கப்பட்டது