பக்கம்:வீரர் உலகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஞானமும் தவமும் 103.

கண்ணுகிய வாள். போழ்ந்தில-பிளக்கவில்லை. மெல்லிய வாறு-மென்மையாக இருக்கும் விதம்.!

yk

நாட்டில் தம் நலத்தைத் துறந்து தவம் புரியும் மக்கள், பலர் இருப்பது அந்த காட்டுக்குச் சிறப்பு. உலகத்தில் அதிகமான துறவிகளே உடைய காடு இது. தாம் பெற வேண்டிய கலங்களே ஏனேயவர் பெறும்படி விடுவது துறவு. தம் குடும்பம் என்ற வரையறையின்றி உலகமே குடும்பமாக எண்ணி வாழ்வது துறவு.

அவர்கள் தனிமையை நாடித் தவம் புரிவார்கள். தாம். செய்த தவத்தால் அவர்களுக்கு ஆன்ம சக்தி மிகுதியாகும். அப்படிச் சேர்த்துக்கொண்ட பேராற்றலே உலகத்துக்குப் பயன்படுத்துவார்கள். மகாத்மா காகதி வாரத்துக்கு ஒரு முறை மெளனமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனே கடத்தினர். அடிக்கடி உண்ணுது கோற்றர். இவை அவருடைய ஆன்ம சக்தியை விளக்கமுறச் செய்தன. உள்ளொளி பெருக்கின. உள்ளொலியைக் கேட்கும்படி செய்தன. தவம் புரிபவர்களுடைய பெருமை யைத் திருக்குறள் பலபடியாக விரித்துரைக்கிறது.

தவம் செய்பவர்களைத் தாபதர்கள் என்பார்கள். தவ ஒழுக்கத்தில் நிற்பவர்கள் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுப்பார்கள். பிறருக்கு எள்ளளவும் துன்பத்தைச் செய்யமாட்டார்கள்.

உற்றதோய் தோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு'

என்பது குறள் கூறும் தவத்தின் இலக்கணம். தவத்தின ரின் சிறப்பைச் சொல்லுவது தாபத வாகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/116&oldid=648084" இலிருந்து மீள்விக்கப்பட்டது