பக்கம்:வீரர் உலகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வீரர் உலகம்

மற்றவர்களேப் போலப் புலன் நுகர்ச்சியிலே ஈடுபடா மல், தேவைகளைக் குறைத்துக்கொள்வது தவம் பயில் பவர்களுக்கு இயல்பு. அவர்கள் நீரிலே பலகால் மூழ்கு வார்கள். தரையே படுக்கையாகக் கிடந்து உ1றங்கு வார்கள். தோலேயே ஆடையாக உடுப்பார்கள். தலையை மழிக்காமல் சடையை வளர விடுவார்கள். சுடரை வழிபடு வார்கள். மக்கள் வாழும் ஊர்களுக்குச் செல்லாமல் தனி மையை நாடிக் காட்டில் தங்குவார்கள். கடவுளேப் போற்று வார்கள். தம்மை நாடி வரும் விருந்தினர்களே வரவேற்று உபசரிப்பார்கள். : -

இத்தகையவர்களேயே ரிஷிகள் என்றும், முனிவர் கள் என்றும் சொல்கிருேம்.

சிறந்த அரச வாழ்வையும் துறந்து தவவாழ்க்கையை மேற்கொண்டவர்கள் பழங்காலத்தில் இருந்தார்கள். அத் தகையவர்களின் துறவு கிலேயைக் கண்டு புலவர்கள் பாடிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்க காலில் உள்ளன. ஒரு பாடல், ஒருவன் துறவு பூணுவதற்குமுன் இருந்த கிலேயையும், பூண்ட பின் மேற்கொண்ட நிலையை யும் சொல்கிறது.

அவன் துறப்பதற்கு முன் அழகிய மாளிகையில் வாழ்க் திருந்தான். அந்த மாளிகையில் எங்கே பார்த்தாலும் கலை மணம் கமழும். ஒவியக் காட்சிகள் ஒளிரும். அந்த மாளிகையின் முழு உருவத்தையும் பார்த்தால் கச்சிதமான சிற்ப வடிவமாகத் தோன்றும். சிறிய மாளிகையா அது? பலர் கூடிப் பேச வேண்டுமா? விரிவான இடம் அங்கே உண்டு. ஒரு நடன அரங்கு நடக்க வேண்டுமா? அதற்கு வேண்டிய இடம் உண்டு. ஒரு பெரிய விழா நடைபெற வேண்டுமா? பல ஊர்க்காரர்களும் வந்து வசதிகளோடு தங்கும்படி விரிவான பகுதிகள் இருந்தன. அத்

தகைய விரிவான இடத்தையுடைய வரைப்பு அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/117&oldid=648085" இலிருந்து மீள்விக்கப்பட்டது