பக்கம்:வீரர் உலகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எல்லேயில் போர் 5 y

தில் அங்கே யாரோ ஒருவர் தொழுவத்தில் இருக்கும் மாட்டைப் பிடித்து வரும்படி ஒருவனே ஏவுகிருர்: "அந்த மாட்டைப் பிடித்துக் கொண்டு வா’ என்று உரக்கக் கூறுகிரும். அது இந்த வீரர்கள் காதில் படுகிறது. அவர் களுக்கு ஒரே கொம்மாளம்; டேய்! நல்ல சகுனம் ஆகிறது. அசரீரி வாக்கு உத்தரவிடுகிறது. புறப் படுங்கள்!” என்று தோள்கொட்டி ஆர்க்கிருர்கள். இவ்வாறு நேரும் நல்ல நிமித்தத்தை விரிச்சி என்று சொல்வார்கள். :

வீரர்கள் புறப்பட்டு விட்டார்கள். அவர்களுக்குப் பசுமாடுகள் எங்கே இருக்கின்றன, நாட்டின் எல்லேயில் எங்கே மேய்கின்றன என்று தெரிய வேண்டாமா? அதற்காக முன்கூட்டியே ஒற்றர்களே அனுப்பியிருக் கிருர்கள். போர் தொடங்கினுல் வீரர்கள் வெளிப்படை யாகப் போரிடுவது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் பகைவர்களுடைய இரகசியங்களேத் தெரிந்து கொள்வது. அதற்காக ஒற்றர் பலரைப் பயிற்றுவித்து, மிகவும் சாமர்த்தியமாகப் பகைவர்களிடையே மறைந்து சென்று பலவகைத் தந்திரங்களினுல் அவர்களுடைய படைப்பலத்தையும், பலவீனத்தையும், திட்டத்தையும் தெரிந்து கொள்ளும்படி செய்வார்கள். அரசியல் தந்திரத் தில் அன்றும் சரி, இன்றும் சரி, இந்த ஒற்றர்களின் செயல் போருக்கு மிகவும் உபயோகமாக இருப்பது.

ஒற்றர்கள் மறைவாகச் சென்று எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இரவோடு இரவாக வந்து சேர்ந்திருக் கிருர்கள். பசுமாடுகள் கிற்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை, அவற்றைக் காத்துக் கொண்டிருக்கும் விற்படையினரின் கிலே ஆகியவற்றை அவர்கள் சொல்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/12&oldid=647981" இலிருந்து மீள்விக்கப்பட்டது