பக்கம்:வீரர் உலகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பாசறையில்

போர் செய்யப் புகுந்த மன்னனுக்கு எப்படியேனும் போரில் பகைவனே வெல்லவேண்டும் என்ற எண்ணமே முந்துற கிற்கும். எந்தத் தடை நேர்ந்தாலும் அதனல் உள்ளம் தளராமல் மேன்மேலும் வீறுகொண்டு எழுவதே வீரம். நகமும் சதையும்போலக் காதலியுடன் இணை பிரியாது ஒன்றி வாழும் உயர்ந்த காதல் வாழ்வு உடையவ ைைலும், அதையும் இப்போதைக்குத் துறந்துவிட்டுப் பகைவரை ஒடுக்குவதையே லட்சியமாகக் கொள்வது அரசன் இயல்பு.

காதலர்கள் கூதிர்க்காலத்தில் ஒன்றியிருப்பார்கள். புணர்ச்சி என்னும் உரிப்பொருளேயுடையது குறிஞ்சித் தினே. அந்தத் திணைக்குக் கூதிர்க் காலம் உரியது. குளிரால் நடுங்கும் அக்காலத்தில் கணவன் மனைவியர் பிரியாமல் ஒன்றுபட்டு வாழ்வது மரபு. ஆணுல் வீரம் மிக்க அரசன் போர்க்களத்தில் அக்காலத்தில் தங்கும்படி நேர்ந்தால் அவன் காமத்தையும் வென்று வீர உணர்ச்சி யுடன் விளங்குவான். இது பாராட்டுவதற்குரிய கிலே.

'கூதிர்ப் பருவம் வந்தும் இவன் தன் காதலியை எண்ணுமல் பகைவரை வெல்லும் ஒரே நோக்கத்தோடு பாசறையில் தங்கியிருக்கிருனே! என்று புலவர்கள் அப்போது வியப்பார்கள். இப்படி வியந்து பாடுவதைக் கூதிர்ப் பாசறை என்ற துறையாக இலக்கணம் கூறும்.

'பலபல தெருக்களுடன் பாசறை இருக்கிறது. அங்கங்கே கூடாரம் போட்டுக் கொண்டு தங்கியிருக் கிருர்கள் வீரர்கள். கூடாரங்களின் மேலே தழையைப்

வி, .8 سالهاست

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/120&oldid=648088" இலிருந்து மீள்விக்கப்பட்டது