பக்கம்:வீரர் உலகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பாசறையில் 117

கிறது! எல்லோரும் அதைச் சுற்றி உட்கார்ந்திருக் கிருர்கள்.

ஆடும் மகளிர் யாழைச் சுருதி சேர்க்கப் பார்க்கிருர் கள். குளிரால் அது பதம் கெட்டிருக்கிறது. அதைத் தம் மார்பிலே த.விக்கொண்டு அந்தச் சூட்டில் சுருதி சேர்க் கிருiகள், கணவன்மாரைப் பிரிந்த மகளிர் தனிமைத் துன்பம் பொருமல் வருந்துகிருர்கள்.

இவ்வாறு கூதிராகிய பருவம் தன் இயல்பைக் காட் டிக்கொண்டு நிலவுகிறது.

அரசி அரண்மனையில் படுக்கையில் கிடக்கிருள். தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல், பாண்டிய மன்னன் பிரிந்து போர்க்களத்துக்குச் சென்றிருத்தலால் பிரிவுத் துன்பத்தால் வருந்துகிறள். அருகில் தோழிமார்கள் அவன் காலே வருடிக்கொண்டிருக்கிருர்கள். வயசான மூதாட்டியர் பல வகையான கதைகளேச் சொல்லிப் பொழுது போக்க முயலுகிருர்கள். 'உன் கணவர் இதோ வந்துவிடுவார்!’ என்று தேறுதல் கூறிக்கொண்டிருக்கிறர்கள்.

அங்கே, போர்க்களத்தில் பாடி வீடு அமைத்துக் கொண்டு வீரர்களோடு தங்கியிருக்கும் அரசன் எப்படி இருக்கிருன்?

யானைகளே வேலாலும் வாளாலும் துணித்து வென்ற வீரர் பலர் பாசறையில் முகத்திலும் மார்பிலும் புண்ணே யுடையவராகிக் கிடக்கிரு.ர்கள். அவர்களைப் பார்க்கும் பொருட்டு அரசன் தன்னுடைய கூடாரத்திலிருந்து புறப் படுகிருன், இரவு நேரம். அங்கங்கே வட்ட வட்டமான விளக்குகளில் பருத்த திரிகளையிட்டு ஏற்றியிருக்கிருர்கள். வடக்கிருந்து வரும் வாடைக் காற்று வீசுகிறது. அப்போ தெல்லாம் விளக்கிலுள்ள சுடர்கள் தெற்குப் பக்கமாகச் சாய்ந்து ஒளி விடுகின்றன. அரசனுக்கு முன்னலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/124&oldid=648092" இலிருந்து மீள்விக்கப்பட்டது