பக்கம்:வீரர் உலகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வீரர் உலகம்

சேனபதி செல்கிருன். அவன் கையிலே வேல் இருக் கிறது. அதன் தலையிலே வேப்ப மாலையைக் கட்டியிருக் கிரு.ர்கள். பாண்டிய மன்னனது சேனைத் தலைவன் அல்லவா? சேனபதி ஒவ்வொரு கூடாரமாகப் புகுந்து வீரர்களே இன்னுர் இன்னர் என்று அரசனுக்குக் காட்டு கிருன்.

பாசறை நடைபாதைக்கு அருகில் குதிரைகளேக் கட்டி யிருக்கிருர்கள். சேணம் முதலியவற்றைக் கழற்ருமல் அப்படி அப்படியே நிறுத்தியிருக்கிருர்கள். மழைத்துளிகள் தம் மேலே பட்டவுடனே குதிரைகள் அவற்றை உதறு கின்றன. இந்தத் தெரு வழியே அரசன் செல்கிருன். அவன் தன்மேலே மெல்லிய மேலாடையைப் போட்டுக் கொண்டிருக்கிருன். அது நழுவுகிறது. நழுவ கழுவ அதை இடக்கையில்ை இடுக்கிக் கொள்கிருன். அவன் பக்கத் திலே அவனுடைய மெய்காப்பாளன் தன் தோளிலே வாளைத் தொங்க விட்டுக்கொண்டு வருகிருன். அவ னுடைய தோளில் வலக்கையை வைத்துக்கொண்டு நடந்து வருகிருன் அரசன். முத்துமாலையையுடைய வெண் கொற்றக் குடையை மழைத் துளிக்குப் பாதுகாப்பாக ஒருவன் பிடித்துக்கொண்டிருக்கிருன். புண்பட்ட வீரர் களைக் கண்டு இன்சொல் கூறும்பொருட்டு இனிய முகத் தோடே செல்லுகிருன் அரசன். .

நேரம் நடு இரவு. மேலே மழை, கீழே ஈரம். இந்தக் குளிரிலும் கள்ளிருளிலும் அரசன் துாங்கவில்லை. தன் மனைவியையும் கினைக்கவில்லை. தன் பாசறையில் வீரர்களேக் கண்டு முகமலர்ந்து பாராட்டி ஊக்கம் உண்டாக்கும் வேலையிலே அவன் முனைந்து கிற்கிருன்.

"அத்தகைய அரசன் போரில் வெற்றி பெறுவாளுக!” என்று வேண்டிக்கொள்ளும் முறையில் நெடுநல் வாடை அமைந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/125&oldid=648093" இலிருந்து மீள்விக்கப்பட்டது