பக்கம்:வீரர் உலகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வாகையின் வகை

இந்த நாட்டில் வெவ்வேறு தொழிலேயும் வெவ்வேறு கடமைகளேயும் கொண்ட மக்கள் அவற்றைச் சரிவரச் செய்து சமுதாயம் முழுவதும் நல்வாழ்வு வாழச் செய்தார்கள். ஒவ்வொரு துறையில் ஈடுபட்டுத் தொழி லாற்றும் பிரிவினர் சமுதாயமென்னும் உடம்பில் வெவ்வேறு உறுப்புக்களைப்போல இருந்து வந்தனர். சமுதாய நன்மைக்கு ஒவ்வொருவருடைய உழைப்பும் இன்றியமையாததாக இருந்தது. காட்டைக் காத்துச் செங்கோலோச்சும் அரசரும், என்றும் நிலையான உண்மைகளே வினேப்பூட்டிக்கொண்டு சமாதானத்தையும் நடுகிலேயையும் நிலைநிறுத்திய அந்தணரும், பொருள் களைக் கொள்ளவேண்டிய இடத்தில் கொண்டு கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து யாவரும் யாவும் பெறச் செய்த வணிகரும், வேளாண்மையிலும் பிற தொழில் களிலும் ஈடுபட்ட தாளாளரும் சமுதாயத்தின் உயிர் நாடிகளாக விளங்கினர். அவ்வவர் தொழில்களைப் புலவர்கள் பாராட்டிப் பாடினர்கள். ஒவ்வொருவர் கிலையையும் நன்கு உணர்ந்து சிறப்பித்தார்கள். அவ்வாறு சிறப்பித்துப் பாடுவதைத் துறையாக்கி அதற்கு இலக்கண மும் அமைத்தார்கள்.

குற்றம் செய்யாமல் செங்கோல் செலுத்தி வீர முரசம் முழங்க எல்லா உயிர்களுக்கும் நலம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு நடுநிலைமையில் கின்று சூரியனைப்போல ஒளிர்பவன் அரசன். அவன் இயல்பை அரச முல்லை என்னும் துறையால் புலவர் போற்றினர். முத்தி ஒம்பி நான்மறையைப் பயின்று வாழும் அந்தணர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/127&oldid=648095" இலிருந்து மீள்விக்கப்பட்டது