பக்கம்:வீரர் உலகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வீரர் உலகம்

சோதிடம் கூறுபவனுக்குக் கணி என்றும் கணிவன் என்றும் பெயர், பூங்குன்றத்தில் ஒரு சோதி. கல்ல புலவராக இருந்தார். அவர் கணியன் பூங்குன்றனர் என்று வழங்கப் பெற்றர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று நாம் அடிக்கடி கேட்கும் தொடக்கத்தை புட்ைய பாடலைப் பாடியவர் அவர். சோதி நூல்கள் பலவற்றையும் அறிந்து விண்ணிலும் மண்ணிலும் கிகழும் நிகழ்ச்சிகளே முன்கூட்டியே சொல்லும் ஆற்றல் உடைய வன் கணிவன். அவன் சிறப்பைச் சொல்வது கணிவன் முல்லை என்ற துறை.

பல காலமாகப் பல போர்களில் ஈடுபட்டு வீரத்தை நிலைநிறுத்திய பழங்குடிகள் பல தமிழ் காட்டில் இருந்தன. அந்தக் குடியில் பிறந்த பச்சிளங் குழந்தைக்கும் வீர உணர்ச்சி மிகுதியாக இருக்கும். மகளிரும் விர உணர்ச்சி உடையவர்களாக விளங்குவார்கள். அவர்களுடைய வீரத்தைப் புலப்படுத்தும் காட்சிகள் சில, இலக்கண இலக்கியங்களில் வருகின்றன. -

ஒரு மறக்குடி மகள் தன் குழந்தைக்குப் பாதுTட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த காட்டின்மேல் பகைப்படை போருக்கு வந்த செய்தியை அவள் உணர்ந் தாள். உடனே அவளுக்கு வீர உணர்ச்சி மிக்கது. பிள்ளையைச் சட்டென்று எடுத்து கிறுத்தினள். முன்பு அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் பகைவரைக் குத்தி வளைந்து போன வேல் ஒன்று இருந்தது. அதை விரைவாக எடுத்து அதன் வளைவைச் சட்டென்று கிமிர்த்தினுள். அதை அவன் கையில் கொடுத்தாள், பரம்பரை பரம்பரையாகப் போரில் புகுந்து வீர விளையாடல் புரிந்த வர்கள் அவளுடைய குடியின் முன்னேர்கள். அத்தகைய வர்களுடைய பெயரும் பீடும் எழுதி அமைத்த நடுகற்கள் அங்கே இருந்தன. அவற்றைக் காட்டி அந்தப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/129&oldid=648097" இலிருந்து மீள்விக்கப்பட்டது