பக்கம்:வீரர் உலகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வீரர் உலகம்

அரசன் ஒர் ஒற்றனே மாத்திரம் விடவில்லை. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாதபடி வெவ்வேருக இரண்டு ஒற்றர்களே அனுப்பியிருந்தான். சில சமயங்களில் மூன்று ஒற்றர்களேயும் அனுப்புவதுண்டு. முதலில் போனவன் ஏமாந்து போனலும், பகையாளியின் ஆசை வார்த்தை யால் மயங்கித் துரோகம் செய்யப் புகுந்தாலும், சோம்பலாலோ வேறு காரணங்களாலோ பொய் சொல்லத் துணிந்தாலும், பகைவருடைய கட்டுக்காவலில் அகப்பட்டாலும், பின்னலே போனவன் உண்மையை உணர்ந்து வந்து சொல்ல முடியும். அதல்ைதான் இரண்டு ஒற்றர்களைத் தனித்தனியே அனுப்பின்ை.

ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும், அரசன் அவர்களே எப்படி நடத்த வேண்டும் என்னும் கருத்துக் களே இந்த நாட்டு அர்த்தசாஸ்திரங்களும், மேல்நாட்டு அரசியல் நூல்களும் விரிவாகச் சொல்கின்றன. திருக்குறளில் ஒற்ருடல் என்று ஒர் அதிகாரமே இருக்கிறது. - -

அரசனுக்கு இரண்டு கண்ணேப்போல ஒற்றும் அரசியல் நூலும் உதவுகின்றன. பகைவரிடத்தும் அயலாரிடத்தும் நண்பர்களிடத்தும் என்ன என்ன நிகழ் கின்றன என்பதை நாள்தோறும் ஒற்றர்களேக் கொண்டு தெரிந்து கொள்வது அரசனுக்குரிய முக்கியமான கடமை. அவ்வாறு ஒற்றரைக் கொண்டு நிகழ்ச்சிகளே அறிந்து ஆராய்ந்து நடவாத அரசனுக்கு வெற்றி கிட்டாது.

அரச காரியம் செய்கின்ற பலவகை அதிகாரிகள், அரசனுடைய சுற்றத்தார், பகைவர்கள் ஆகிய அனைவருடைய பேச்சுக்களேயும் செயல்களையும் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/13&oldid=647982" இலிருந்து மீள்விக்கப்பட்டது