பக்கம்:வீரர் உலகம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வீரர் உலகம்

(கல்-நடுகல். மொய்-வலிமை. என்னேயர்-என் தமையன்மார். கணே-அம்பு. உதைப்ப-செலுத்த. எய்முள்ளம்பன்றி. ஏறு-ஆண் சிங்கம் போன்ற மகன்.)

இப்படியே இல்லத்தையும் ஊரையும் வீரம் உடையன வாகச் சொல்லுவதும் உண்டு.

அரசன் தன்னுடைய நாட்டை நன்கு பாதுகாத்து, ஆறில் ஒன்று வரியாக வாங்கி, காவல் தொழிலை மேற் கொள்ளுவதையும், போரில் புகுந்து வென்று போர்க் களத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ளுவதையும் பல படியாகப் புலவர் பாராட்டுவர். அவனுடைய குடையைப் புகழ்வர். அவன் உறங்குவதைச் சிறப்பிப்பர்.

மன்னன் தனக்கு வேண்டியதைக் கொடுக்கவும் திருப்தி அடையாமல், வீர விளையாட்டையே எதிர் நோக்கிச் சில வீரர்கள் இருப்பார்கள். அரசனுல் பல வளங்கள் பெற்று வாழ்ந்த வீரர்கள் போரில் தம் உயிரைக் கொடுத்துச் செஞ்சோற்றுக் கடன் கழிப்பார்கள். இவர்களுடைய புகழையும் புலவர் எடுத்து உரைப்பர். சால்பு நிறைந்த சான்ருேர்களுடைய சிறப்பையும், ஒரு பக்கத்தை உடைய கிணே என்னும் பறையை அடிப் போரின் இயல்பையும் பாராட்டுவர்.

உலகத்திலுள்ள பற்றை ஒழித்து மெய்யான பொருளே விரும்பி வாழ்வதும், உலகத்திலுள்ள துயரைக் கண்டு பற்றை ஒழிந்து நிற்பதும் சிறந்த மக்களுடைய இயல்பு. சில அரசர்கள் அரச உரிமையைக் கைவிட்டு விரக்தியோடு இருப்பது உண்டு. பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி உடையார்' என்று கூறுவர். துறவும் ஒருவகை வெற்றியே. - - -

ஒருயிர்க்குத் துன்பம் வந்தால் அதைத் தன் உயிரைக் கொடுத்துக் காப்பதும், அதன் வருத்தத்தைத் தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/131&oldid=648099" இலிருந்து மீள்விக்கப்பட்டது