பக்கம்:வீரர் உலகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வாகையின் வகை 135

தாகக் கொண்டு வருந்துவதும், பொய் கூறுதல் கள்ளுண்ணுதல் முதலியவற்றைத் துறந்து கிற்றலும் அருளொடு புணர்ந்த துறவறத்தின் இலக்கணம். எந்தப் பொருளினிடத்தும் பற்றின்றி கிற்கும் தன்மையும் அந்தத் துறவின் இலக்கணமாகும். இவை யெல்லாம் அகப் பகையை வென்ற வெற்றி.

இப்படியாக வீரத்தை விரிவாகச் சொல்லும் புறப் பொருளில், பல வகை வெற்றியைச் சொல்லும் வாகைத் திணையில், மக்களுடைய கிலேயும் சிறப்பும் அகப்புறப் போராட்டங்களில் வென்று கிற்கும் வீரமும் பேசப்படு கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/132&oldid=648100" இலிருந்து மீள்விக்கப்பட்டது