பக்கம்:வீரர் உலகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அரசன் புகழ் 137

ஆயப் புகுங்கால்

அறிவொக்கும்; எவர்க்கும் அன்ஞன்.'

இத்தகைய அரசனேப் புலவர்கள் புகழ்த்து பாராட்டு வார்கள். அவனுடைய வீரத்தையும் ஈகைத் திறத்தையும் சிறப்பித்துப் பாடுவார்கள். வீரம் விளேத்துப் போரில் வெற்றி பெற்று அதனுல் பெறும் பொருள்களேயெல்லாம், தன் பால் வரும் கலைஞர்களுக்கும் புலவர்களுக்கும் ஏழை களுக்கும் வாரி வழங்குவான் அரசன், ஆகவே அவனுடைய ஈகைக்குரிய முதலைத் தருவது வீரச்செயல், இந்த இரண்டையும் இணேத்துப் பாடுவார்கள் புலவர்கள்.

புறப்பொருளில் வரும் திணைகளில் வெட்சி முதல் வாகை ஈருகவுள்ள தினேகள் அரசனுடைய வீரச் சிறப்பையே பெரும்பாலும் புகழ்கின்ற முறையில் அமைந்தவை. வேறு வேறு இயல்புகளேப் பாடிப் பரவுவதற்கென்றே தனியாக ஒரு திணை உண்டு. அதைப் பாடாண் திணை என்று சொல்வார்கள். பாடுவதற்கு ஏற்ற ஆண்மகனுக்குரிய செயல்வகைகளேச் சொல்வது என்பது அதற்குப் பொருள். பா.ாண் என்பது பாடுதல் வினயையும் படப்படும் ஆண் மகனேயும் நோக்காது அவனது ஒழுகலாறுகிய தின உணர்த்தினமையின் வினத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை' என்று இந்தத் தொ.ருக்குப் பொருளும் இலக்கணமும் கூறுவர் கச்சினுக்கினியர். அரசனுடைய புகழையும், வலிமையையும், தனக்கென வைத்துக் கொள்ளாமல் கொ டுக்கும் கொடையையும், மிக்க இரக்கத்தையும் எடுத்துச் சொல்வது பாடாண் பாட்டு என்று புறப் பொருள் வெண்பா மாலேக்காரர். சொல்வார்.

ஒளியும் ஆற்றலும் ஒம்பா ஈகையும் - அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/134&oldid=648102" இலிருந்து மீள்விக்கப்பட்டது