பக்கம்:வீரர் உலகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 28 வீரர் உலகம்

என்பது அவர் கூறும் இலக்கணம். இசையும் வலியும் சீர்துரக்காக் கொடையும் தண்ணளியும் என்று சொல்லும் இவற்றைத் தெரிந்து சொல்லியது” (பு. வெ. 189) என்பது இதன் பழைய உரை.

இதோ ஒரு புலவன் அரசனேப் பாராட்டுகிறன். அவ்வரசன் மற்ற மன்னர்கள் எல்லாம் அஞ்சி ஒடுங்கும்படி வீரத்தை வெளிப்படுத்துகிருன். சிங்கம் முழங்கிளுல் காடே எவ்வாறு கிடுகிடாய்த்துப் போகுமோ, அவ்வாறு போர் செய்வதாக அவன் வஞ்சினம் கூறினுல் பகை யரசர்கள் கடுங்கிப் போவார்கள். மன்னர்களில் சிங்கம் அவன். :

வேதம் வல்ல அந்தணர்கள் அவனைப் பாராட்டு கிருர்கள். அறத்தை கிலேநிறுத்தி நல்ல செயல்களெல்லாம் குறைவற நடக்கும்படி செய்து, கடவுட்பக்தியுடையவளுப் இருத்தலினுல் அவர்கள் பல இனிய சொற்களேக் கோத்துப் புகழ்மாலே குட்டுகிறர்கள். அவர்களுடைய சொற்களுக்குத் தொடர்பூட்டும் மாலையாக அவன் விளங்குகிருன்.

அது மட்டுமா? தன் நாட்டில் இல்லற வாழ்க்கை நடத்துபவர்கள் யாவரும் குறையின்றி வாழச்செய்யும் அவன், தானும் சிறந்த குடும்பியாக வாழ்கிருன். பல மகளிரை மணப்பது அந்தக் கால அரசர் வழக்கம். அழகும் மென்மையும். Ձ-653l-Ա1 அவனுடைய தேவிமார்கள் அவனுல் இன்பம் பெற்று அவனுக்கு இன்பம் வழங்குகிருர்கள். அன்னம் போன்ற நடையை யுடைய அவர்களுக்கு அவன் அரிய அமுதம்போல் இலங்குகிருன். . . . . . .

அவன் ஈகையைப்பற்றி என்ன சொல்வது? புலவர் களும் கலைஞர்களும் தன்னைப் புகழ்வார்கள் என்று எதிர் பார்த்து அவன் கொடை வழங்குவதில்லை. முல்லப்பூத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/135&oldid=648103" இலிருந்து மீள்விக்கப்பட்டது