பக்கம்:வீரர் உலகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வீரர் உலகம்

புலவர்கள். அவனேத் திருமாலாகவும் பிற தெய்வங் களாகவும் வைத்து.. புகழ்வார்கள். - அரசன் உறங்கச் செல்கிருன். குழந்தையானுல் துயிலும்பொருட்டு அன்னேயும் பிற மகளிரும் தாலாட்டுப் பாடுவார்கள். அரசன் உறங்கச் சென் முன் என்பதையும் அழகு பெறச் சிலர் பாடுவார்கள். தன்னுடைய வீரத்தால் பொல்லாதவர்களே அடக்கித் தீங்கை யெல்லாம் போக்கி, 'இனிமேல் கொடுமையே தலைதுாக்காது என்று நிச்சயப் படுத்திக்கொண்டு, சிறிதே ஒய்வு பெறலாமென்று துயிலச் சென்றிருக்கிருன் அரசன் என்று பாடுவார் கள். இதைக் கண்படை நிலை என்று சொல்வார்கள். t துயிலச் செல்லவேண்டும் என்று முன்னிலைப் படுத்தியும் சொல்வதுண்டு. சோழ அரசனே, ஒரு கணங்கூட இடை பீடு இல்லாமல் வாரி வாரி வழங்குகிருப் .ே அதனல் புலவர் முதலிய பரிசிலர்களுக்கு மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. அவர்களுக்கு யானைகளே வழங்குகிருப். அவற்றை வாங்கி வாங்கி அவர்கள் சலித்துப்போளுர்கள். உலகத்தைக் காவல் செய்வதனுல் உறங்காமல் விழித்துக்கொண்டே இருக்கிருப் போலும்! அதற்கு அவசியம் இல்லையே! லோகபாலகர்களாகிய எண் திசையைக் காக்கும் தேவர்கள் விழித்துக் கொண்டே இருக்கிறர்கள். ஆதலின் சிறிதே துயில் கொண்டருள வேண்டும். பரிசில் வாங்குபவர்களும் சிறிது துயி லட்டுமே!’ என்று சொல்லும் பழம்பாடல் ஒன்று உண்டு.

வாய்வாள் தானே வயங்குபுகழ்ச் சென்னி,தின் ஒவா ஈகையின் உயிர்ப்பு:இடம் பெரு அர், கன்றுகவர் முயற்சியிற் பெரிதுவரும் தின:ே உலகம் காவலர் பலர்விழித் திருப்ப வறிதுதுயில் கோடல் வேண்டும் நின் அரிசில் டிாக்களும் துயில்கம் சிறிதே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/137&oldid=648105" இலிருந்து மீள்விக்கப்பட்டது