பக்கம்:வீரர் உலகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அரசன் புகழ் 131

(வாய் வாள்-குறியைத் தப்பாமல் வெட்டும் வாள். சென்னி-சோழ அரசனே. ஒவா-நிற்காத, உயிர்ப்பு இடம் - மூச்சுவிடும் அவகாசம். உலகம் காவலர்-லோக பாலராகிய திக்குப் பாலகர். வறிது-சிறிது.)

விடியற்காலேயில் அரசனைப் பாட்டுப் பாடித் துயில் எழுப்புவது வழக்கம். கின்றபடியே பாடலப் பாடித் துயிலெழுப்பும் வேலையையுடையவரைச் சூதர் என்று சொல்வார்கள்.

தாவில் நல்இசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ரத்திய துயிலெட்ை நிலை’ - - என்று இதன் இலக்கணத்தைத் தொல்காப்பியம் வகுக் கிறது. தமது வலிமையாலே பாசறைக்கண் ஒரு மனக் கவற்சியின்றித் துயின்ற அரசருக்கு நல்ல புகழைக் கொடுக்கும்பொருட்டுச் சூதர் துயிலின்றும் எழுப்பி ஏத்திய துயிலெடை நிலை என்பது இதன் பொருள். பிற்காலத்தில் திருப்பள்ளியெழுச்சி என்று வழங்குவதும் இதைப் போன்றதே. தெய்வங்களேத் துயிலெழுப்பு வதைத் திருப்பள்ளியெழுச்சி என்பர். பகைவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நீ நின் பாயலில் படுத்து உறங்கிய்ை. துயின்றது போதும். உன் பகைவர்கள் நெடுந்துயில் கொள்ளும்படி நீ துயிலுணர்ந்து எழுவாயாக!' என்று அரசனைத் துயிலெழுப்புவார்கள். "இதோ உன்னுடைய அரண்மனை வாயிலில் தாம் தாம் செலுத்த வேண்டிய கப்பங்களே அளந்து குவித்துவிட்டு, பின்னத் தரிசிக்க வேண்டுமென்று பல மன்னர்கள் காத்துக் கிடக்கிறர்கள். அவர்களுக்கு அருள் செய்வதற் காக நீ துயிலெழுந்தருள வேண்டும் என்றும்

பாடுவார்கள். - . -

துயிலெழுந்த அரசன் பல மங்கலமான காரியங்களேச் செய்கிறன். மலர் முதலிய மங்கலப் பொருள்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/138&oldid=648106" இலிருந்து மீள்விக்கப்பட்டது