பக்கம்:வீரர் உலகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எல்லேயில் போர் 7

அறியாமல், ஒற்றர்களின் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். * , ,

ஒற்றர்கள், யாரும் ஐயுருத வகையில் நடந்து கொள்ள வேண்டும்; அதற்கு ஏற்ற கோலத்தோடு உலவ வேண்டும். ஒருகால் யாரேனும் ஐயுற்றல் அஞ்சாமல் சமயத்துக்குத் தக்கபடி கடந்து கொள்ள வேண்டும். அகப்பட்டுக் கொண்டால் உள்ளதைச் சிறிதும் வெளி விடாத உறுதியோடு இருக்க வேண்டும்.

ஒற்றர்கள் சில சமயம் துறவிகளேப் போல வேடம் புனேந்து செல்வார்கள். துறவிகள் என்றே தம்மை கம்ப்ம்படி செய்து மிகவும் இரகசியமான இடங்களுக்குக் கூடப் போய்விடுவார்கள். அவர்கள் ஒருகால் அகப்பட்டுக் கொண்டால், அவர்களே என்ன செய்தாலும் எதையும் சிறிதளவுகூட வாய்விட மாட்டார்கள். அங்கங்கே கடப்ப வற்றை அவ்வவ்விடங்களில் பழகுபவர்களைக் கொண்டு தெரிந்து கொள்வார்கள். தாம் அறிந்து கொண்டவை உண்மையா என்பதையும் சோதித்துப் பார்த்துத் தெளிவு பெறுவார்கள்.

இவ்வாறு சென்று ஒர் ஒற்றன் பகைவரிடம் உள்ள செய்திகளேத் தெரிந்து கொண்டு வந்து சொன்னுல், அவற்றைக் கேட் அளவில் அரசன் திருப்தியடைய மாட்டான். மேலும் ஓர் ஒற்றனே அனுப்பி அவன் கொணரும் செய்திகளையும் வைத்து ஒப்புநோக்கி உண்மையை உணர்வான். அப்பாலும் மூன்ரும் ஒற்றன் ஒருவனே அனுப்பி அவன் தெரிக் து வருவனவற்றையும் கேட்டு, மூவர் சொல்லும் செய்திகளில் பொதுவாக இருப்பவற்றை உண்மை என்று தெரிந்து கொள்வான். இந்த மூன்று பேரும் ஒருவருக்குத் தெரியாமல் மற்ருெருவர் சென்று ஆராய்வார்கள். இவ்வாறு சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/14&oldid=647983" இலிருந்து மீள்விக்கப்பட்டது