பக்கம்:வீரர் உலகம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. வீரர் உலகம்"

வெண்குடையையும் உடைய அரசனுக்குச் சிவந்த

வாயினையும் பெரிய கண்ணினேயும் உடைய மைந்தன் பிறந்தான்; அதல்ை பெரிய புகழையுடைய தேவர்கள்

மகிழ்ந்தனர்; பூவுலகில் உள்ளவர்கள் வாழ்த்திஞர்கள்; பகைவர் தம் பகைமனப்பான்மையை விட்டுப் பணிக்

தார்கள் என்று பொலிவு மங்கலம் பாடுகிருர்கள்.

"கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்

பெருங்கட் புதல்வன் பிறப்பப்-பெரும்பெயர் விண்ணுர் மகிழ்ந்தார்; வியலிட்த்தார் ஏத்திகுர்; எண்ணுர் அவிந்தார் இகல்." (கருங்கழல்-வலிமையான வீரக்கழல். பெரும் பெயர். பெரிய புகழ். வியலிடம்-பூமி. எண்ணுர்-பகைவர். இகல்பகை.)

அரசனுடைய பிறந்த நாளே வெள்ளணி நாள் என்று சொல்வார்கள். அன்று நாடு முழுவதும் பெரிய கொண். டாட்டம் கிகழ்கிறது. பரிசிலர்கள் பொன்னும் யானையும் ஆடையும் பெறுகிருர்கள். அரசன் நீடுழி வாழவேண்டு மென்று யாவரும் வாழ்த்துகிருர்கள். நல்லவர்கள் கல்லுரைகறி வழிப்படுத்தவும், பரிசிலர் பரிசு பெற்றுப் புகழவும், குடிமக்கள் இன்பு வாழ்வு பெற்று ஏத்தவும், பகைவரும் பணிந்து ஏவல் செய்யவும் மனைவி மக்களோடு அரசன் பிறர் வாழ வகை பண்ணித்' தானும் உலகம் போற்ற் வாழ்கிறன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/141&oldid=648109" இலிருந்து மீள்விக்கப்பட்டது