பக்கம்:வீரர் உலகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆற்றுப்படை

ஒருவனேப் புகழும்போது நேர்முகமாக, "நீ இத்தகை. யவ்ன்” என்று புகழ்வது ஒரு வகை. அப்படியின்றிக் குறிப் பாக, மறைமுகமாக, அவனுடைய புகழை எடுத். துரைப்பது ஒரு வகை. அப்படிக் கூறுவதில்தான் சுவை மிகுகிறது. புகழும் வகைகள் பலவற்றைச் சொல்லும் பாடாண்திணையில் ஆற்றுப்படை என்ற ஒருவகை அமைப் பைக் காணலாம். அதனைச் சிறு நூலாகவும் இயற்றி யிருக் கின்றனர் புலவர்.

ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழியிலே சேர்த்தல்: என்பது பொருள்; வழிகாட்டி என்று சொல்லலாம். பரிசில் பெற்ற ஒருவன் பெருதவர்களுக்கு, நான் இன்னுரிடத்தில் சென்று இன்ன பரிசைப் பெற்றேனென்று கூறி, அந்த உபகாரியிடம் போவதற்குரிய வழி முதலியவற்றைச் சொல்லும் வகையில் அமைவது அது. . . . . -

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பின்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் . .

பெற்ற பெருவளம் பெரு அர்க் கறிவுறீஇச்

சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும்' என்று ஆற்றுப்படையின் இலக்கணத்தைத் தொல்காப் பியர் கூறுகிருர் ஆடல் மாந்தரும் பாடற் பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு செய்த கூறு பாடும் என்று இதற்குப் பொருள் எழுதுவார் கச்சினர்க் கினியர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/142&oldid=648110" இலிருந்து மீள்விக்கப்பட்டது