பக்கம்:வீரர் உலகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆற்றுப்படை 187:

விளங்கினர்கள்; ஆல்ை அவர்கள் பிறருடைய உபகா ரத்தை எதிர்பார்த்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லே. கபிலர், நக்கீரர் முதலிய அந்தணரும், சீத்தலைச் சாத்தனும் முதலிய வணிகரும், கோவூர் கிழார் முதலிய வேளாளரும் புலவர்களாக விளங்கினர். அறுவை வாணிகன் இளவேட்டனர், கூலவாணிகன் சித்தலைச் சாத்தனர் முதலியவர்கள் வெவ்வேறு வியாபாரம் செய்தவர்கள்.

புலவர்கள் உபகாரிகள்ை நாடிச் சென்ருலும் தம் முடைய மானத்துக்குக் குலேவு வரும்படி கடந்துகொள்ள மாட்டார்கள். தரம் அறிந்து பாராட்டும் வள்ளல்களிடம் அவர்களுக்கு ஈடுபாடு மிகுதி. தரம் அறிவதை வரிசை யறிதல் என்று சொல்வார்கள். . .

'வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை' என்று தம்முடைய நிலையைக் கூறுவர் புலவர்.

'ஈதல் எளிதே மாவண் தோன்றல்

வரிசை அறிதலோ அரிதே' என்பார்கள்.

பரணர்கள் ஒரு தனிச் சாதியினர். அவர்களில் வாய்ப்

பர்ட்டுப் பாடுகிறவர்களும் வாத்தியம் வாசிக்கிறவர்களும் உண்டு. வாத்தியம் வசிக்கிறவர்களைக் கருவிப் பாணர்கள் என்று சொல்வார்கள். இசைப்பாணர்ப்ாழ்ப் பாணர், மண்டைப் பாணர் என்று மூவகையினரை நச்சினர்க்கினியர் கூறுவர்.

இசைக் கருவிகள் பல தமிழ் நாட்டில் இருந்தன. அவற்றில் முதலில் நிற்பது குழல், அது சிறு குழல், பெருங் குழல் என்று இருவகைப்படும். சிறு குழலே வங்கியம் என்றும் பெருங்குழலப் ப்ெரு வங்கியம் என்றும் கூறுவது வழக்கம். பெருவங்கியம்" என்பது இப்போது தமிழ்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/144&oldid=648112" இலிருந்து மீள்விக்கப்பட்டது