பக்கம்:வீரர் உலகம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வீரர் உலகம்

நாட்டுக்கே உரிய இசைக் கருவியாக விளங்கும் நாகசுரத் தைப் போன்றது என்று தோன்றுகிறது.

குழலுக்கு அடுத்தபடி வருவது யாம். குழல் துளேக் கருவி. யாழ் நரம்புக் கருவி. யாம்களிலும் பல வகை உண்டு. பெரிய யாழ், சிறிய யாழ் என்ற பிரிவு இருந்த தென்று தெரிய வருகிறது. அவற்றைப் பேரியாம், சிறியாம் என்பர். அவற்றை வாசிக்கிறவர்களே முறையே பெரும் பாணர் என்றும் சிறுபாணர் என்றும் வழங்குவர். பாறை யன்றி வேறு வகையான கருவிகளே வாசிக்கிறவர்களும் உண்டு.

பாணர்களின் மனேவியர் விறலியர் என்ற பெயர் பெறுவர்; பாடினி என்றும் சொல்வதுண்டு. விறல் என்பது பாவம் அல்லது சத்துவத்தைக் குறிப்பது. பாவம் தோன்ற ஆடுவதில் வல்லவர்களாகையால் விறலியர் என்ற பெயரைப் பெற்ருர்கள். ஆடல், பாடல், அழகு என்ற மூன்றிலும் சிறந்து நிற்பவர்கள் அவர்கள்.

பொருநர் என்று ஒரு சாதியினர் உண்டு. அவர்கள் ஒரு கையால் அடிக்கும் கினே அல்லது தயாரிப்பறையை முழக்குபவர்கள். ஏர்க் களம் பாடுநர், போர்க்களம் பாடுகர், பரணி பாடுநர் என்ற பிரிவுகளே உடையவர்கள் அவர்கள். கோலம் புனைந்து வருபவர்களையும் பொருநர் என்பார்கள். ஒருவரைப்போல வேறு ஒருவர் வேடம் புனேவதைப் பொருநுதல் என்பது மரபு.

பல வகுப்பினருள்ளும் கூத்துப் பயிற்சியுடைய கலைஞர்களேக் கூத்தர் என்பார்கள். பல வகையான கூத்துக்களேச் சமயம் அறிந்து ஆடுவது இவர்கள் வழக்கம்.

எங்கே விழா நடந்தாலும் பாணரும் விறலியரும் கூத்தரும் சென்று பாடியும் ஆடியும் மக்களே மகிழ்விப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/145&oldid=648113" இலிருந்து மீள்விக்கப்பட்டது