பக்கம்:வீரர் உலகம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஆற்றுப் படை 139

பார்கள். அரசரும் செல்வரும் பாணர்களுக்குப் பொன்னுல் செய்த பூவைப் பரிசாக அளிப்பார்கள். விறலியர்களுக்கு அணிகலன்களே வழங்குவார்கள். புலவர்களுக்கு நாட்டை யும் வீட்டையும் விளகிலங்களேயும் யானைகளையும் ஆடை அணிகளேயும் கொடுப்பார்கள்.

இவ்வாறு தம்முடைய கலேயினல் செல்வர்களேயும் பிறரையும் உவகையில் ஆழ்த்தும் கலைஞர்களைத் தமிழுலகம் பாராட்டியது. அவர்களுடைய பாராட்டுக்கு உரியவர்களாவதைச் செல்வர்கள் விரும்பினர்கள். புலவர் களால் பாடல் பெருதவர்கள் வாழ்ந்தும் பயன் இல்லை என்ற எண்ணம் எங்கும் நிலவியது.

இந்தக் கலைஞர்களே ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நூல்களே ஆற்றுப்படை. யாருக்கு வழிகாட்டுகிருர்களோ அவர்களுடைய பெயர்களோடு சார்த்தி ஆற்றுப்படை நூல்களுக்குப் பெயரை அமைப்பார்கள். புலவர் ஆற்றுப் படை, பாணுற்றுப்படை, விறலியாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, கூத்தர் ஆற்றுப்படை என்று அவை பெயர், பெறும்.

பழங்காலத்தில் ஆற்றுப்படைச் செய்யுட்கள் மிகுதி) யாக இருந்திருக்க வேண்டும். சங்க நூல்கள் என்று வழங்கும் தொகுதிகளில் முதலில் நிற்பது பத்துப்பாட்டு: அது பத்து நெடும் பாடல்கள் அமைந்த தொகுதி. அதில் சரிப்ர்தியாக ஐந்து ப்ாட்டுக்க்ள் ஆற்றுப்படை நூல்கள். முருகப்பெருமானேப் புகழ்ந்து நக்கீரர் பாடிய திருமுரு காற்றுப்படை பத்துப் பாட்டில் முதலில் உள்ளது. அது புலவராற்றுப்படையைச் சார்ந்ததே. முருகன் திருவருள் பெறவேண்டும் என்று விரும்பிப் புக்க புலவன், ஒருவனுக்கு வழிகாட்டும் வாய்பாட்டில் அமைந்தது அது. சோழன் கரிகாற் பெருவளத்தானே முடத்தாமக் கண்ணியார் பாடியது பொருநராற்றுப்படை. அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/146&oldid=648114" இலிருந்து மீள்விக்கப்பட்டது