பக்கம்:வீரர் உலகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14t). வீரர் உலகம் ,

பொருருனே ஆற்றுப்படுத்தியது. அடுத்தது சிறுபாணுற் றுப்படை. சிறிய யாழை வாசிக்கும் சிறு பாணனே ஆற்றுப் படுத்துவதாக அமைந்தது; நல்லியக்கோடன் என்பவனே நத்தத்தனர் என்ற புலவர் பாடியது. அதில்,

"இன்குரற் சிறியாழ் இட்வயின் தழி இ' என்று வருகிறதல்ை அந்தப் பாணன் சிறிய யாழை வாசிக்கும் சிறுபாணன் என்பதை அறியலாம்.

பத்துப்பாட்டில் நாலாவதாக உள்ளது பெரும்பானுற்

றுப்படை,

'இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி' என்று அதில் வருகிறது. பேர்யாழை வாசிக்கும் பாணனே ந்ோக்கிச் சொல்லியது அது. இந்த நூலால் தொண்டை மான் இளந்திரையனக் கடியலூர் உருத்திரங்கண்ணனர் பாடினர். பத்துப்பாட்டின் இறுதியில் இருப்பது மலைபடு கடாம் என்ற பாட்டு. அதற்குக் கூத்தராற்றுப் படை என்ற பெயரும் உண்டு. கூத்தரை ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்தது அது. நன்னன் என்னும் வள்ளலைப் பெருங்கெளசிகனர் என்னும் புலவர் புகழ்ந்து பாடியது

نظلم هاه

இவற்றை யன்றிப் புறநானூற்றில் ஆற்றுப்படையாக' அமைந்த பாடல்கள் பல இருக்கின்றன.

இந்த ஆற்றுப்படிைகளில் புலவராற்றுப்படை மட்டும்: இறைவனிடத்து அறிவுடைய புலவனே ஆற்றுப்படுத்து. விதாகக் கொள்வர். திருமுருகாற்றுப்படை, செவ்வேல்' சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு புறப்பட்ட புலவனுக்குச் சொல்வதாக அமைந்ததைக் கொண்டு இப்படி வகுத்தன்ர் போலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/147&oldid=648115" இலிருந்து மீள்விக்கப்பட்டது