பக்கம்:வீரர் உலகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. வீர வழிபாடு

வீரர்கள் இறந்த பிறகும் அவர்களே வணங்கி வாழ்த்துவதற்கு ஏற்ற சின்னங்களே அமைத்துக் கொண் டாடுதல் இந்த நாட்டு மரபு. கல்லில் வீரன் வடிவத்தையும் அவனுடைய பெயரையும் வீரச்செயல்களேயும் பொறித்து வழிபடும் வழக்கம் தொல்காப்பியம் எழுந்த பழங்காலத் துக்கு முன்பிருந்தே கிலவி வருகிறது. தொல்காப்பியமும், புறநானூறு முதலிய சங்க நூல்களும் பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள் வெண்பா மாலே முதலியனவும் இந்த வீர வழிபாட்டைப் பற்றிய செய்திகள் பலவற்றைச் சொல்கின்றன. -č - -

வீரர்களுக்காக நடும் கல்லே வீரக் கல் என்பார்கள். ஒரு வீரன் இறந்துபோல்ை அவனே அதோடு மறந்து போகாமல், நல்ல இடத்திலிருந்து கல் எடுத்து வந்து கட்டு வழிபடுவார்கள். இதல்ை கல்லெடுப்பு என்று வழக்கில் ஒரு தொடர் வழங்குகிறது. வீரர்கள் பகைவருடன் போரிட்டு எதிர்த்து நின்று உயிர் நீத்த இடத்திலும் வேறு இடத்திலும் இந்தக் கற்களே நடுவதுண்டு. இறந்த வீரனேத் தெய்வமாகப் போற்று வார்கள். இப்படி அமைந்த பல இடங்களே பிற்காலத்தில் வீரன் முதலிய கிராம தெய்வங்களின் கோயில்களாக மாறிவிட்டன என்று தோன்றுகிறது.

கடவுளேக் கல்லுருவத்தில் வைத்து வழிபடும் வழக்கம் மிகப் பழங்காலம் முதற்கொண்டு இந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதற்கும், அத்தகைய உருவங்களே எடுத்துக் கொணர்ந்து நீரில் இட்டு வைத்து கட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/149&oldid=648117" இலிருந்து மீள்விக்கப்பட்டது