பக்கம்:வீரர் உலகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 8 வீரர் உலகம்

வந்த ஒற்றர்களுக்கு அரசன் வெளிப்படையாகச் சிறப்புச் செய்ய மாட்டான். அப்படிச் செய்தால் அந்த ஒற்றருடைய இரகசிய கிலே வெளிப்பட்டுவிடும் அல்லவா? - -

இவ்வாறு ஒற்றர்களே ஆளும் முறையைப் பற்றித் திருவள்ளுவர் கூறுகிருர்.

ஒற்றர்களால் பசுமாடுகளைப்பற்றிய செய்திகளே அறிந்த வீரர்கள் எல்லேயை நோக்கி வீறு நடை போட்டுச் செல்கிருர்கள். பகைவர் நாட்டு எல்லேயை அடை கிருர்கள். பெரிய் வழிகளிடையேயும் செல்லுகிருர்கள்; நுழைந்து செல்லும் குறுகிய வழியிலும் செல்ல வேண்டி நேர்கிறது. கடைசியில் பசுமாடுகள் இருக்கும் இடத்தை அணுகுகிருர்கள்; பாதுகாப்பைக் கடந்து மாடுகளைக் கைப்பற்றிக் கொள்கிருர்கள்.

பகை நாட்டு வீரர்கள் ஓடி வருகிறர்கள். ஆவினத் தைக் கைப்பற்றிய வீரர்களோடு போரிடுகிரு.ர்கள். பகை வர்களோடு பொருது அழித்து, அவர் கைப்பற்றிய மாடு களோடு திரும்புகிருர்கள் வீரர்கள். வழியில் மாடுகளை வயிருர மேயச் செய்து தண்ணிர் காட்டி வெயில் வேக்ள யில் நிழலிலே தங்கச் செய்து செல்கிருர்கள்.

எல்லைக்குச் சென்ற வீரர்கள் மாடுகளோடு வரப் போகிரு.ர்கள் என்று நாட்டில் உள்ளவர்கள் ஆர்வத் தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருர்கள், மாடுகளே அடித்துக்கொண்டு வருகிறவர்கள் வெற்றி ஆரவாரத் தோடு துடிகளே முழக்கிக்கொண்டு வருகிறர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/15&oldid=647984" இலிருந்து மீள்விக்கப்பட்டது