பக்கம்:வீரர் உலகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. வீர வழிபாடு 143

வழிபடுதல் முதலிய சடங்குகளும் நெடுங்கால வரலாற் ருேடு தொடர்புடையன என்பதற்கும் புறத்தினேயில் அமைந்துள்ள கற்காட்சி முதலிய துறைகளே சான்ருகும். வீரனே வழிபடுவதற்காக அவனுடைய உருவம் முதலியவற்றைப் பொறிப்பதற்கு ஏற்ற கல்லே நல்ல இடத்திலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். இதைக் காட்சி என்றும் கற்காண்டல் என்றும் இலக்கணப் புலவர் கூறுவர்.

ஒரு மலேயில் ஒரு வீரனுக்கு ஏற்ற கல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த மலேக்கு உண்டான பேற்றைப் பாராட்டிச் சொல்கிறது ஒரு பாட்டு. பெரிய பானேக்குள் இருந்து தவம் செய்பவர்கள் மண்ணுேடு மண்ணுகப் போகிறர்கள். அப்படியின்றி நீ கின்றபடியே செய்த தவம் பெரிது. இந்த உலக முழுவதும் தாங்கமாட்டாத பெரும் புகழையுடைய இந்த வீரனின் சீர்த்தியைப் பொறிக்க உன்னிடம் ஒரு கல்லேக் கண்டேன்’ என்ற கருத்தை உடையது அது. -

'தாழி கவிப்பத் தவம்செய்வசர் மண்ணுக வாழிய தோற்றனே மால்வரை-ஆழிசூழ் மண்டலம் ஆற்ரு மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனென் நின்மாட்டோர் கல்." (தாழி-பாகின. நோற்றனே.தவஞ் செய்தாய். மால் வரை-பெரிய மலேயே. மறப் புகழோன்.வீரத்தால் உண்டான புகழை உடையவன்.)

தெய்வ ஆவேசம் கொண்டவர்கள், இந்தக் கல்ல எடுத்துக் கொள்க!' என்று காட்டப் பூமாரி பொழிந்து அதைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு வழக்கம்.

இவ்வாறு தேர்ந்தெடுத்த கல்லே, காட்டுவதற்குரிய இடத்துக்குக் கொண்டுவருவார்கள். அங்கே கால்கோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/150&oldid=648118" இலிருந்து மீள்விக்கப்பட்டது