பக்கம்:வீரர் உலகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வீரர் உலகம்

காதலால் இல்லம் உயரும்; வீரத்தால் நாடு உயரும். ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக நிற்பது.

காதற் சிறப்பால் இல்லத்தரசியாக விளங்குபவள் பெண்; அதல்ை அவளே மனேவி என்றும் இல்லாள் என்றும் வழங்குவர். இல்லத்தில் அரசி உண்டேயன்றி அரசன் இல்லை. மனேவன், இல்லான் என்று ஆண்மகனேச் சொல்லும் வழக்கு இங்கே இல்லை. வீரச்சிறப்பால் சமுதாயத்துக்குத் தலைமை தாங்கிக் கணத்துக்கு நாயகனாக இருப்பவன் கணவன். கூட்டத்துக்குத் தலைவன் என்பது கணவன் என்பதற்குரிய பொருள். கூட்டத்துக்குத் தலைமை தாங்க வீரம் வேண்டும். அவனே கணவன். மனைவியைக் கணவி என்னும் வழக்கு இல்லே.

வீரத்தைப் பேணிப் பகையை அழித்து வெற்றி கொண்டு வாழ்ந்த மன்னர்களின் வரலாறுகளே உலகத்து நாடுகள் எல்லாவற்றிலும் கேட்கலாம். தமிழ் நாட்டில் வீரத்தை வரையறை செய்து வீரச்செயல்களே ஒழுங்கு படுத்தி இலக்கிய இலக்கணங்களிலும் அந்த வரை யறையை வற்புறுத்தி வைத்தார்கள் தமிழ் மக்கள். இந்த வீர உலகத்தைத் தொல்காப்பியம் முதலிய இலக்கணங் களில் உள்ள புறப்பொருளைப் பற்றிய பகுதிகளிலும், அப் பொருளைத் தனியே சொல்லும் இலக்கண நூல்களிலும், புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய இலக்கியங்களிலும் காண் கிருேம், கம்பராமாயணம், வில்லிபாரதம், கலிங்கத்துப் பரணி முதலிய இலக்கியங்களிலும் வீர நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கிருேம். தமிழிலக்கணத்திலே வரும் சில கவிசமய மாகிய புலவர் மரபுகளே அந்த இலக்கியங்களினிடையே புலவர்கள் அமைத்திருப்பதையும் காணமுடிகிறது.

காதலிலே கனிவும் அன்பும் காட்டிய தமிழ் மக்கள் வீரத்திலே மறமும் மிடுக்கும் காட்டினர்கள் என்பதை இந்த இலக்கண இலக்கிய ஏடுகள் கினைவுறுத்துகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/155&oldid=648123" இலிருந்து மீள்விக்கப்பட்டது