பக்கம்:வீரர் உலகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பின்னுரை

தமிழில் இலக்கணம் வரவர விரிந்துகொண்டே வருகிறது. அது முதலில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவாக இருந்ததென்பதைத் தொல் காப்பியத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். முன்ருவது பிரிவாகிய பொருளதிகாரத்தில் அகப்பொருள், புறப் பொருள், செய்யுள் இலக்கணம், உவமையின் இலக்கணம் என்னும் பகுதிகள் உள்ளன. நாளடைவில் யாப்பு இலக்கணம் தனியாக விரிந்தது; பிறகு அணியும் தனியே விரித்துச் சொல்லும் கிலேயைப் பெற்றது. இன்று மூன்று ஐந்தாக விரிந்து தமிழ் ஐந்து இலக்கணங்களே உடையது என்ற கிலேயில் உள்ளது, அரும்பொருள் ஐந்தையும்' என்று நன்னூற் சிறப்புப் பாயிரம் இந்த ஐந்து பிரிவு களேயும் குறிக்கிறது. அதற்கு மேலும் விரிந்து பாட்டியல் என்ற பிரிவு ஒன்று பிற்காலத்தில் தோன்றியிருக்கிறது.

தமிழ் இலக்கணத்தில் சிறந்தது பொருளிலக்கணம் என்று சொல்வார்கள். அந்தப் பொருளும் அகம், புறம் என்று இரு வேறு பிரிவாகப் பிரியும். புறப்பொருளின் இலக்கணத்தைத் தொல்காப்பியத்தில் உள்ள புறத்திணை இயல் சொல்கிறது. அதில் வரும் சூத்திரங்களில் பல "இடங்களில், என்ப' என்றும், என்மனர் புலவர்' என்றும், வைத்தனர் வழியே” என்றும், உளவென மொழிப' என்றும் வரும் சொற்களேயும் தொடர்களையும் பார்த்தால் தொல்காப்பியர் கூறும் இலக்கணம் அவரால் புதியதாகப் படைக்கப்பட்டதன்று என்பதும் தொன்று தொட்டு வருவதென்பதும் புலனாகும். இந்தப் புறப் பொருளைப் புறம், அகப்புறம், புறப்புறம் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/156&oldid=648124" இலிருந்து மீள்விக்கப்பட்டது