பக்கம்:வீரர் உலகம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 வீரர் உலகம்

மூன்ருகப் பகுத்துச் சொல்வது ஒரு முறை. அகப் பொருளில் அமைந்தது போலப் புறப்பொருளுக்கும் தினேகளும் துறைகளும் உண்டு.

இப்போது புறப்பொருள் இலக்கணத்தைக் கூறுவன வாக நமக்குக் கிடைப்பவற்றுள் தொல்காப்பியப் புறத்திணை இயலும், வீரசோழியத்திலுள்ள பொருளதிகாரத்தில் புறப் பொருளேப்பற்றிக் கூறும் சூத்திரங்களும், புறப்பொருள் வெண்பாமாலையும் பழையவை. பின்னல் தோன்றிய இலக்கண விளக்கம், தொன்னூல் என்பனவற்றிலும் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் பகுதிகள் உள்ளன. அகப் பொருள், யாப்பு, அணி ஆகியவை வரவரப் பல தனியிலக் கணங்களாக விரிந்தது போலப் புறப்பொருள் இலக்கணம் மிகுதியாக விரியவில்லை. அவ்விலக்கணத்தை ஆழ்ந்து பயில்வார் இன்மையும் புறத்துறையை அமைத்துப் பாடும் இலக்கியங்கள் குறைந்து போனமையுமே இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. • - யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களில் வெவ்வேறு நெறிகள் உண்டு. யாப்பில் தொல்காப்பியர் வகுக்கும் முறை வேறு; யாப்பருங்கலம் வகுக்கும் முறை வேறு. அப்படியே அணியில் தண்டியலங்காரம் காட்டும் வகை வேறு; மாறனலங்காரம் வகுக்கும் வகை வேறு. இப்படியே புறப்பொருளிலும் இரு வேறு நெறி முறைகள் இருந்தன என்று தெரியவருகிறது. தொல்காப்பிய நெறி ஒன்று; புறப் பொருள் வெண்பாமாலை காட்டும் நெறி ஒன்று. தொல் காப்பியம் புறப்பொருளுக்கு ஏழு தினேகள் வகுக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையோ பன்னிரண்டு பகுதி களாக வகுத்துச் சொல்கிறது. தொல்காப்பியப் பொரு ளதிகார உரையில் ஒரிடத்தில் கச்சிர்ைக்கினியர் பின் வருமாறு எழுதுகிறர்: முற்படக் கிளந்தவென எடுத்த

1. தொல்காப்பியம், அகத்திணையியல், சூ. 1, உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/157&oldid=648125" இலிருந்து மீள்விக்கப்பட்டது