பக்கம்:வீரர் உலகம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பின்னுரை 151

லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதினே உளவாயின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என வரும். ஒழிந்தோர் பன்னிரண்டு என்ருராதலின் புறத்தினே ஏழு என்றது என்னேயெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறுபோல, அகத்திணை ஏழற்கும் புறத்திணை ஏழு என்றலே பொருத்தமுடைத் தாயிற்று. இதிலிருந்து புறத்தினேப் பகுதிகள் பன்னி ரண்டு என்ற வழக்கும் ஒரு சாராரால் மேற்கொள்ளப் பெற்றதென்பது தெளிவாகும். - -

பன்னிரண்டு என்று கூறும் புறப்பொருள் வெண்பா மாலேக்கு மூலநூல் பன்னிரு படலம் என்று தெரிய வருகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையின் சிறப்புப் பாயிரத்தில், -

மன்னிய சிறப்பின் வாளுேர் வேண்டத் தென்மலே இருந்த சிர்சால் முனிவரன்

தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருங் கீர்த்தித் தொல்காப் பியன்முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்' என்று வருவதல்ை அச் செய்தி தெரிவதோடு, பன்னிரு படலம் தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்கள் இயற்றிய இலக்கண நூல் என்பதும் தெரியக் கிடக்கிறது. பன்னிரு படலத்தில் முதற் பகுதியாகிய வெட்சிப் படலத் தைத் தொல்காப்பியரும் மற்றப் பதினொரு பகுதிகளே வேறு பதினொருவரும் பாடினர் என்று கொள்ளவேண்டும். ஆனல் இளம்பூரணர் தொல்காப்பிய உரையில், பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறின ரென்றல் பொருந்தாது” என்று எழுதுகிருர். பன்னிரு 1. தொல். புறத்திரீன இயல், 35, உரை. -का

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/158&oldid=648126" இலிருந்து மீள்விக்கப்பட்டது