பக்கம்:வீரர் உலகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திரை மீட்கும் போர் 15

இத்தகைய வீரக்குடி மக்கள் இந்த நாட்டில் மலிங் திருந்தார்கள். அவர்கள் வழி வழியே வீரத்தை வளர்த்து வருகிறவர்கள். அவர்கள் வாழும் மண் வீரமணம் வீசுவது. அவர்கள் உடலில் ஒடும் குருதி வீரச் செருக்குடையது. இன்று கேற்று வந்த குடி அல்ல அவை. பூமி தோன்றின காள்தொட்டு வாளும் வீரமும் ஏந்திப் புகழ்பெற்று வரும் குடிகள். அத்தகைய குடியிற் பிறந்த வர்கள், கம் காட்டு ஆன் கிரையை மிட்டு வந்து புகழ் பெற்று நிற்பது ஒரு வியப்போ?

'பொய் அகல நாளும் புகழ்விக்ாத்தல் எள்வியப்பrம்?

வையகம் போர்த்த வயங்கொலி நீர். கையகலக் கல்தோன்றி மண்தோன்குக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.” (பொய்யானது கிங்க, இந்தக் குடி காள்தோறும் புகழை உண்டாக்குதல் என்ன அதிசயம்? இது எத்தகைய குடி தெரியுமா? பூமி முழுவதையும் மறைத்துப் பெருகிய யுகாந்த காலத்துப் பிரளய வெள்ளம் வடிந்து போக, முதல் முதலில் மலே தோன்றியது; மண் தோன்ற வில்லே; அந்தப் பழைய காலத்திலேயே அந்த மலையில் கையில் வாளுடனே எல்லோருக்கும் முதலிலே தோன்றி இன்றுகா தும் வளர்ந்து பழமை பெற்ற குடி இது.)

இவ்வாறு அந்தக் குடியின் பெருமையைப் புறப் பொருள் வெண்பா மாக கூறுகிறது.

பகைவர் காட்டுப் பசுக்களைக் கொண்டு வருவதோடு தொடர்புடைய வீரச் செயல்களேச் சொல்லும் பகுதிக்கு வெட்சித் திணை என்றும், பகைவர் அடித்துச் சென்ற ஆநிரையை மீட்டுக் கொணரும் வீர நிகழ்ச்சிகளேச் சொல்லும் பகுதிக்குக் கரந்தைத் திணை என்றும் தமிழ்ப் புலவர்கள் பெயர் கொடுத்து வழங்குவார்கள். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/22&oldid=647991" இலிருந்து மீள்விக்கப்பட்டது