பக்கம்:வீரர் உலகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வீரர் உலகம்

இரண்டும் பின்னலே நிகழப் போகிற பெரும் போருக்கு முன்பு நிகழும் செயல்கள்.

துரியோததிையர் விராட மன்னனுடைய நாட்டி லிருந்து ஆகிரைகளேக் கொண்டு சென்ருர்கள்; அவற்றை மீட்டு அப்போது நிகழ்ந்த போரிலே அருச்சுனன் துரியோதனன் முதலியோரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இதைப் பாரதத்தில் காணலாம்.

பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காடுகளில் இருந்து வாழ்ந்து, அப்பால் ஒராண்டு மறைவாக மச்ச நாட்டு அரசனகிய விராடனுடைய நகரத்தில் வெவ்வேறு கோலம் புனைந்து மறைந்து வாழ்ந்தார்கள். தருமன் புரோகிதராகவும், வீமன் சமையல்கார ணுகவும், அருச்சுனன் பேடியாகவும், நகுலன் குதிரைத் தலைவகை வும், சகாதேவன் பசுவைக் காப்பவனுகவும், திரெளபதி வண்ண மகளாகவும் மறைந்து விராடனுடைய நகரில் இருந்தார்கள். பதின்மூன்று ஆண்டுகள் கிறைவேறில்ை பாண்டவர்கள் தமக்குரிய நாட்டைப் பெற்றுக்கொள் வார்கள். அதற்குள் நாம் அவரைக் கண்டுபிடித்து விட்டால் மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று எண்ணிய துரியோதனன் வெவ்வேறு திசைகளில் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை ஏவினன். அவர்கள் பல இடங்களிலும் சென்று தேடியும் பாண்டவர்களேக் காணவில்லை.

அப்போது பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து, :இந்த ஒற்றர்களால் அவர்களைக் காண முடியுமோ? தருமபுத்திரன் எங்கே இருக்கிருனே, அங்கே மழை வளம் சிறக்கும்;விளைவு மிகும். இந்த அடையாளத்தைக் கண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/23&oldid=647992" இலிருந்து மீள்விக்கப்பட்டது