பக்கம்:வீரர் உலகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£3 வீரர் உலகம்

(இரு பெரு வேந்தருக்கும் இடையே உள்ள நாட்டின் மேல் ஆசையால், அங்கே வாழ்பவர்களுக்கு அச்சம் உண்டாக அந் நாட்டிடத்தே போய் ஒரு மன்னன் மற்றெரு மன்னனே வெல்லுதலேக் குறித்தது வஞ்சித் தினே.)

இது தொல்காப்பியத்தில் வஞ்சித் திணேயின் பொது இலக்கணத்தைச் சொல்லும் சூத்திரம்.

போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பு நல்ல நாள் பார்த்து அந்த நாளில் அரசன் தன் குடையைப் புறப்படச் செய்வது ஒரு வழக்கம். அதைக் குடைநிலை அல்லது குடை நாட்கோள் என்று சொல்வார்கள். அரசனுடைய முக்கிய மான அங்கங்களில் குடை ஒன்று. அவனுடைய பாதுகாக் கும் ஆற்றலுக்கு அடையாளமாக இருப்பது அது. எல்லாக் குடிமக்களேயும் துன்பம் வராமல் பாதுகாப்பேன் என்ப தைச் சுட்டுவதற்குக் குடை பிடிப்பது அரசர் வழக்கம், "சூரியனை மறைக்கும் மேகம்போல அந்தக் குடை தோற்றி லுைம், அது வெயிலே மறைப்பதற்காகக் கொண்டது அன்று; வருந்திய குடிமக்களின் துன்பத்தைப் போக்கி அவர்களுக்கு கிழல் செய்வதற்காக எடுத்தது என்று கிள்ளிவளவனது குடையை வெள்ளேக்குடி நாகனர் என்ற புலவர் பாடுகிருர்.

"ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மு மாக விசும்பின் நடுநின் ருங்குக் கண்பொர விளங்கும்தின் விண்பெர்ரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்ருே அன்றே; வருந்திய குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ!” (சூரியனைத் தன் மேற்கொண்ட பக்கம் திரண்ட மேகம் மாகமாகிய உயர்ந்த வானத்தின் நடுவு நின்று அதன் வெயிலே மறைத்தாற்போலக் கண் ஒளியோடு மாறுபட விளங்குகின்ற, வான முட்டிய பரந்த சினது வெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/29&oldid=647998" இலிருந்து மீள்விக்கப்பட்டது