பக்கம்:வீரர் உலகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வீரர் உலகம்

பாருங்கள். கம் மன்னன் தன் கையில் வேலை ஏந்திப் போருக்குச் சென்ருல், நாம் படைக்கலன் ஏந்திப் (3լյrif செய்யும் அவசியங்கூட இராதுபோல் இருக்கிறது. அரசனுடைய கிலேயைக் கண்டு அஞ்சி நடுங்கிப் பகைவர்கள் அவன் காலில் வந்து விழுவார்கள்' என்று வீரர் தம் மன்னனைப் பாராட்டிப் பேசுகிருர்கள். "ஐயோ பாவம்! நம் அரசனுடைய கண்கள் சிவந்து விட்டன. இனிமேல் பகைவர் நாடு பாழாய்ப் போய் விடும் என்பதில் என்ன சந்தேகம்? தலையில் பூவை வைத்துக்கொண்டு சிறு தேரைக் குழந்தைகள் உருட்டி விளேயாடும் நாடு அது. அந்த நாடு விணுகப் பாம்படப் போகிறது!’ என்று சிலர் பகைவர்களுக்கு இரங்குவது போலப் பேசுகிருர்கள். - -

படை புறப்பட்டுச் செல்கிறது. பெரும்போர் கிகம் கிறது. அந்தப் போரில் மிக்க வீறுடனும் மிடுக்குடனும் வீரர்கள் போரிடுகின்ருர்கள். பகைவர்பால் அவர்களுக்குச் சினம் மூள்கிறது. ஆலுைம் சில அறங்களே அவர்கள் மறக்கவில்லை. பகைவர் நாட்டுக்குள் புகுந்து பல ஊர் களைப் பாம்படுத்துகிரு.ர்கள். ஆலுைம் கல்லவர்களுக்குத் தீங்கு உண்டாக்கவில்லை. கோயில்களே அழிக்கவில்லை, அவற்றுக்குச் சிறிதளவு தீங்கும் வராமல் மிகவும் பாது காப்பாகப் போகிருர்கள். தவம் செய்யும் பெரியோர்கள் உறையும் மடங்களேச் சிதைக்கவில்லை. போரினல் மக்களுக்குத் தீங்கு உண்டானலும் துறவிகளுக்கு யாதோர் இன்னலும் நேரவில்லை. அந்தணுளர்கள் உறை பும் இடங்களையும் வீரர்கள் அணுகவில்லை. ஏனைய இடங்களே அழித்து, எதிர்த்தவர்களைப் பொருது ஒழிக்கிருர்கள். - . . g . -

இவ்வாறு செய்த வீரர்களுக்கு அவ்வப்போது பரிசு களே அளிக்கிருன் வேந்தன். மிக்க ஆண்மையையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/31&oldid=648000" இலிருந்து மீள்விக்கப்பட்டது