பக்கம்:வீரர் உலகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாடு கொள்ளும் போர் ಶಿಕ

வீரர்களுக்கு அரசன் அன்பு கொண்டு இவ்வாறு ஆதரவு செய்வதைப் பேராண் வஞ்சி என்ற துறையாக வைத்துப் பாடுவார்கள் கவிஞர்கள்.

பலிபெறும் நன்னகரும் பள்ளி யிடனும்

ஒலிகெழு நான்மறையோர் இல்லும்-நலிவொரீஇப் புல்லார் இரியப் பொருதார் முண்கெடுத்த வில்ாைர்க் கருள்சுரத்தான் வேந்து.'

(பூசை செய்யும் நல்ல கோயில்களும், துறவிகள் இருக்கும் மடங்களும், இனிய மறையொலி பொருந்திய அந்தணர் வீடுகளும் புகுந்து கலிதலே விட்டுவிட்டு, பகை வர்கள் தோற்று ஒடும்படி போர் செய்த, வீரரின் செருவை வென்ற வில்லேந்திய தன் வீரர்களுக்குப் பல பரிசுகளே வழங்கி அருள் சுரந்தான் வேந்தன்.)

சில சமயங்களில் பகை வேந்தன் போருக்கு ஆற்ருமல் அஞ்சிப் பணிந்து வந்து சமாதானம் பேசுவான். அவன் காணிக்கையாகப் பல பொருள்களைக் கொணர்ந்து கொடுக்க, எதிர்த்துச் சென்ற அரசன் சினம் ஆறிப் போரை நிறுத்தி விடுவதும் உண்டு. s போரில் அரசனுடைய பரிசுகளைப் பெற்ற வீரர்களே மற்றவர்கள் போற்றிப் பாராட்டுவார்கள். வீரர்களுக்கு எனதி, காவிதி என்ற பட்டங்களே அளிப்பது வழக்கம். அந்தப் பட்டங்களுக்கு அடையாளமாகப் பொற்பூக்களப் அணிவிப்பார்கள். நாடும் ஊரும் வழங்குவார்கள்,

ஏளுதி என்பது சேனதிபதிகளுக்குக் கொடுக்கும் பட்டம். ஏளுதிநாத நாயனர் என்று ஒரு காயனர் முன்பு இருந்தனர். ஏதிை திருக்கிள்ளி என்ற படைத்தலைவரு டைய புகழ் புறநானூற்றில் வருகிறது. ஏனுதிப்_பட்டம் 1. புறப்பொருள் வெண்பா மால், 44.T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/32&oldid=648001" இலிருந்து மீள்விக்கப்பட்டது