பக்கம்:வீரர் உலகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ஐதி வீரர் உலகம்

பெறுபவ்ருக்கு மோதிரம் கொடுப்பது மரபு. அதற்கு ஏனாதி மோதிர்ம் என்று பெயர். ஒரு படைத் தலைவன் ஏனாதிப் பட்டம் பெற்று அதற்கு அடையாளமாகிய மோதிரத்தையும் அரசன் வழங்கப் பெற்றன். அவனைப் போற்றிப் பாராட்டிய பழம்பாட்டு ஒன்று உண்டு.

போர்க்கடல் ஆற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்

கார்க்கட்ல் பெற்ற கரையன்ருே-போர்க்கெல்லாம் தான் ஆதி யாகிய தார்வேந்தன் மோதிரம்சேர் எருதிப் பட்டத் திவன்.' - (எல்லாப் போர்களுக்கும் தானே முதல்வகை உள்ள ‘மாலையை அணிந்த வேந்தன் தந்த மோதிரத்தைப் பெற்று ஏதிைப் பட்டமும் பெற்ற இந்தப் படைத் தலைவன், போருக்குப் பலத்தை உண்டாக்கும் குதிரை பூண்ட தேர் களையுடைய பல படைகளுக்கும், சமுத்திரம் பெற்ற கரை 'யைப் போல் கின்று பாதுகாப்பவன் அல்லவா?)

போர் நிகழும்போது வீரர்களுடைய மறச் செயலை எப்படி விரிப்பது? "எவ்வளவு பெரிய வீரகை இருந் தால் என்ன? என் முன்னே வந்து போர் செய்யட்டும். அவனுடைய உடம்பைப் பருந்துக்கு இரையாக்குவேன். அவனே யாவரும் புகழ வீர சொர்க்கத்துக்கு அனுப்பு வேன்' என்று ஆரவாரிக்கிருன் ஒரு வீரன். என்னுடைய 'பரம்பரையே மறவர் பரம்பரை. எங்கள் தகப்பன் வாளே ஏந்திப் புறப்பட்டபோது அவன்முன் போரில் எத்தன பேர் இறந்துபட்டார்கள் தெரியுமா?’ என்று தன் குடிப் பெருமையைச் சொல்லி வீறு பேசுகிருன் ஒரு வீரன், அவ்வாறு வழிவழியே வீரங்காட்டி வெற்றி பெறுபவர் களுக்குநல்ல வயல்களைப் பரிசாகத் தருவான் அரசன், ல் பருவகாலத்தில் பெய்யும் மழையைப் போலப் பகை வருடைய அம்புகள் வீழ்ந்தாலும், வயலிலுள்ள கெண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/33&oldid=648002" இலிருந்து மீள்விக்கப்பட்டது