பக்கம்:வீரர் உலகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, நாடு கொள்ளும் போர் g7.

களைப்போல வேல்கள் பிறழ்ந்து ஒளிவிட்டாலும், பொன்னுலாகிய நெற்றிப் பட்டத்தையுடைய பெரிய யானேகளின் தந்தங்களின் துணி குத்தினுலும் ஓடாமல் கின்று பொருது வெற்றி பெற்ற பெருமையையுடையவர்கள் வீரர்கள். அவர்கள் ஆழமான நீரையுடைய பொய்கையில் பிறழ்ந்த வாளே மீன், பெரிய வீடுகளில் கெல்லை வைத் திருக்கும் சேர்களுக்கு அடியில் புரளுவதற்குக் காரண மான வயல்களைப் பெறுவார்கள்; அது பெரிய காரியமா? என்று ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.

'கால மாரியின் அம்பு தைப்பினும்

வயற்கெண்டையின் வேல்பிறழினும் பொலம் புனை ஒடை அண்ணல் யானை இலங்குவான் மருப்பின் துதிமடுத்து ஊன்றினும் ஒடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளே நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுதல் யாவது'

(புறநானூறு, 287)

பகைவர்கள் கின்று பொர மாட்டாமல் ஒட, அவர் களுடைய நாட்டைக் கொளுத்துவதும் உண்டு. பெண்கள் அஞ்சி அழுது ஊருக்குப் பொதுவான இடத்திலே திரண்டு அலமர, அவ்வூர்களில் எரியூட்டுவார்கள். பாம்பட்ட பகைவர் நாட்டுக்குள்ளே புகுந்து, அங்கே கிடக்கும் மணி ககளயும் பொன்னையும் கைப்பற்றிக்கொண்டு வருகிருர்கள் வீரர்கள். வைரமும், மாணிக்கமும், முத்தும், பொன்னும் அவர்கள் கொண்டு வந்திருக்கிருர்கள். அவற்றைத் தம் நாட்டில் பலருக்கும் வழங்குகிருர்கள், முதலில் வீரர்கள் எழுச்சி பெறும்படியாகப் பாடிய புலவர்களுக்குப் பரிசு வழங்குகிருர்கள். யாழை மீட்டிப் பாடும் பாணர்களுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/34&oldid=648003" இலிருந்து மீள்விக்கப்பட்டது