பக்கம்:வீரர் உலகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வீரர் உலகம்

தருகிரு.ர்கள். நாட்டில் மறவேந்தர் புகழைப் பாடிக் காலம் கழிக்கும் புலவர்களுக்கும், பாட்டுப்பாடி யாவரை யும் இன்புறுத்தும் பாணர்களுக்கும் இது அறுவடை நாள். இதுவரையில் பகை நாட்டிற் சென்று போரிட்டு வீரம் காட்டி வெற்றி கொண்ட வீரர்கள் இனி இளைப்பாறப் போகிரு.ர்கள். அவர்கள் இன்ப வாழ்வு பெறும்போது அந்த வாழ்வு பின்னும் சுவையுடையதாகும்படி புலவர்கள் அவர்களைப் புகழ்கிருர்கள்; பாணர்கள் இசை பாடி இன்புறுத்துகிரு.ர்கள்.

வீரர்கள் பெற்ற வெற்றி அவர்களுக்குப் புகழை ஈந்தது; அரசனுக்குப் புதிய நாட்டைத் தந்தது; கலைஞர் களுக்கும் நல்ல வளத்தை உண்டாக்கியது. அத்தகைய வெற்றியைப் பெற்ற வீரர்களேப் புகழ்வது பொருத்தமான காரியந்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/35&oldid=648004" இலிருந்து மீள்விக்கப்பட்டது