பக்கம்:வீரர் உலகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிறந்த வீரம்

பெரும் போர் கடக்கின்றது. படை எடுத்து வந்த வேந்தளுேடு எதிர் கின்று பொரும் மன்னன், வந்தவ லுடைய படையின் வலிமையைப் பார்க்கிமு ன். வரவரத் தன்படை சோர்வடையும் என்பதை அவன் உணர்கிருன். எத்தனே காலம் போரிட்டாலும் வெற்றி தன் பக்கம் கிட்டாது என்பது உறுதியாக அவனுக்குத் தெரிகிறது. அப்போது வீண் பெருமையினுல் போரை நிறுத்தமாட்டே னென்று சொல்லி மேலும் பொருதால் அவனுடைய படை அழியும்; நாடு அழியும். பணிய வேண்டிய இடத்தில் பணி தலும் கிமிர வேண்டிய இடத்தில் கிமிர்தலும் நல்ல மன்ன ணுக்கு இலக்கணம். போர் தொடர்ந்து கடைபெற்ருல் குடிமக்கள் வீணே அழிந்தொழிவார்கள் என்ற உண் மையை முன்கூட்டியே தெளிந்து, போர் தொடுத்த அரச ைேடு சமாதானம் செய்துகொள்வதும் அரச நீதியில் ஒரு வகை. பகையரசன் விரும்பும் திறையைக் கொடுத்து, போர் மேலும் நடவாமல் சந்தி செய்துகொள்ளும் அரசன், தன் குடிமக்களிடம் உள்ள கருணையால் அப்படிச் செய்கிருன். அப்படியின்றி முரட்டுத் துணிவினால், வரு கின்ற கேட்டை மதியாமல் போர் செய்கிறவன் தன் பெரு மையையும் உயிரையும் இழந்து, தன் நாட்டு மக்களப் பெரிய அவல கிலேயில் ஆழ்த்தி விடுகிருன்.

இவ்வாறு பகையரசன் திறை கொடுத்துச் சமாதானம் செய்துகொள்ள முந்தும்பொழுது, போர் தொடுத்த மன்னன், 'இவனைப் பூண்டோடு ஒழித்துவிட்டுத்தான் திரும்புவேன்' என்பது வீரமாகாது. அது விலங்கினத் துக்கு வரும் வெறி போன்றது. ஆகவே அரச நீதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/36&oldid=648005" இலிருந்து மீள்விக்கப்பட்டது