பக்கம்:வீரர் உலகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வீரர் உலகம்

கன்கு உணர்ந்த மன்னர்கள், பணிந்து வந்து திறை கொடுக்கும் பகையரசர்களே ஆதரித்துப் போரை நிறுத்தி விடுவார்கள். இது சிறந்த வீரம் என்றே போற்றுவதற் குரியது. திறை கொடுக்கும் அரசன் தன் நாடு வீணுக அழிந்து போகுமே என்ற கருணையினல் சரணடைகிறன். அந்தக் கருணை போரில் வென்று வரும் அரசனுக்கும் இருக்கவேண்டும். பகைவர் நாடாக இருந்தாலும் அங் குள்ள மக்கள் வீணுகஅழிவதை அவன் விரும்பமாட்டான்.

பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனே அரிசில்கிழார் என்னும் புலவர் பத்துப் பாடல்கள் பாடிப் புகழ்ந்திருக்கிருர். பதிற்றுப்பத்தில் அப் பாடல்கள் உள்ளன. அவனுடைய வீரத்தையும் ஈகைச் சிறப்பையும் விரிவாக அந்தப் பாடல்களில் சொல்கிரும். ஒரு பாட்டில், பகைவர் திறை கொடுக்க அவன் போர் செய்யாமல் திரும்பியதைச் சொல்கிருர்.

பேய் மிடுக்குடன் வருகிறது; உயிரை உறிஞ்சுவேன் என்று வருகிறது. அதைக் கண்டவன் அதற்குரிய பலியை இடுகிருன். உடனே பேயின் சினம் ஆறுகிறது. அது பலியைப் பெற்றுக்கொண்டு மீண்டு போய்விடுகிறது. பேயே இத்தகைய கருணையைக் காட்டும்பொழுது அரசன் காட்டாமல் இருக்கலாமா? நீ அத்தகைய பேய் போலத் திறையை ஏற்றுக்கொண்டு திரும்புகிருய். உன் ளிைடம் இந்தக் கருணை இருப்பதனால் கிறைப்ாயுளுடன் வாழ வேண்டும். இவன் அறிவுடையவன், இவன் அறி வில்லாதவன் என்று நன்கு ஆராய்ந்து, இவ்வாறு : அருள் செய்யாமற் போனல் உலகத்தில் யார் வாம் வ்ர்ர்கள்?’ என்று பாடுகிருர் புலவர்: * .

"மெய்பணி கூரா அனங்கெனப் பரவலின்

பலிகொண்டு பெயரும் பாசம் போலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/37&oldid=648006" இலிருந்து மீள்விக்கப்பட்டது